சில நேயர்களின் கருத்துகள்
cri
வி-------வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பது விஜயலட்சுமி
ரா--------கூடவே சேர்ந்து வணக்கம் சொல்வது ராஜாராம்
வி--------ராஜா, இன்றைய கடிதங்களைப் படிக்கலாமா
ரா-------இலங்கை காத்தாண்குடி நேயர் மு மு ஹம்தான் மார்ச் திங்கள் 27ம் நாள் எழுதிய கடிதம் சீன வானொலியின் இன்பப் பயணம் நிகழ்ச்சி தனக்கு மிகவும் விருப்பமானது என்கிறார். காரணம், அவருடைய ஆசிரியர் சீனாவின் இயற்கை என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லியிருந்தாராம். அதற்கு இன்பப் பயணம் நிகழ்ச்சி மூலம் தெரிந்து வைத்த தகவல்கள் உதவியாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இலங்கை நேயர் இந்திரா மகேந்திரன் கினிகத்தேனை என்ற ஊரில் இருந்து எழுதிய கடிதம் மார்ச் 17 அன்று நலிமரப்பில் கலையரசி அவர்கள் தண்ணீரின் மகத்துவம் மற்றும் வெங்காயத்தின் மருத்துவகுணம் பற்றி கூறிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.
வி------நேயர்களே. எங்களுடைய நிகழ்ச்சி மாணவர்களுக்கு உதவியாக உள்ளன என்றறிய மகிழ்ச்சியாக உள்ளது. அறிவைப் பரப்பும் எங்கள் நோக்கத்தில் இது ஒரு வெற்றி என்றே கருதுகிறோம். தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்
ரா------இலங்கை காத்தாண்குடி நேயர் எஸ் எல் எம் அர்ஷாத், தமது கடிதத்தில் கடல் கடந்து வந்த போதிலும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, மாணவர்களாகிய எமது அறிவை வளர்ப்பதில் முன்னிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ரா------பெரிய காலாப்பட்டு நேயர் பி, சந்திர சேகரன், மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள்களில் எழுதிய கடிதங்கள் சீனாவில் இன்பப்பயணம் தமிழ்மூலம் சீனம் சீன மகளிர் அறிவியல் உலகம், நலவாழ்வுப் பாதுகாப்பு சீனாவுக்கு அப்பால் போன்ற பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். நட்புப் பாலம் நிகழ்ச்சியில் சீனாவிற்கு வகும் தமிழர்களைத் தேடிப்பிடித்து பேட்டி கண்டு ஒலிபரப்புவது நன்றாக உள்ளது. நம்பெருமைகளை அடுத்தவர் கூறினால் பெருமை. சீனாவில் உள்ள பெருமைகளை நாங்கள் கூறினால் அது சீனாவில் வாழும் மக்களுக்குப் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணக்கால் நேயர் ரா அன்பழகன் பிப்ரவரி திங்களில் எழுதிய கடிதங்கள் நமது பல நிகழ்ச்சிகளைப் பாராட்டி விட்டு, சீனக்கதையில் இனிய உதயம் நாவலில் மயோ கார்டியல் இன்ப்ரக்ஷன் நோய் தெரிந்து கொண்டோம். வரும் முன் காப்பது நல்லது என்பதை இது உணர்த்தியது என்று எழுதியுள்ளார்.
வி-------நேயர்களே. உங்களுடைய அக்கறைக்கு நன்றி. நட்புப் பாலம் நிகழ்ச்சி மூலம் உறவுப்பாலம் அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
|
|