• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-16 10:00:30    
ஆபத்தான அலங்காரம்

cri
கடனோ உடனோ வாங்கி சொந்தமாக ஒரு வீட்டை கட்டியபிறகு அதற்கு உள் அலங்காரம் செய்வது மிகவும் சிக்கலான வேலை பல வண்ணங்களைத் தயாரிக்க்கும் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தொலைக் காட்சிகளிலும் வார மாத இதழ்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை காட்டி நம்மை ஈர்க்கின்றன. நாமும் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து மனதுக்கு ரம்மியமான ஒரு புதிய நிறத்தை உருவாக்கி சுவர்களில் அடித்து மகிழ்கிறோம். சுற்றுப்புறம் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தால் நமது மனதும் உற்சாகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் உள் அலங்காரத்துக்காக வீட்டுச் சுவர்களில் பூசப்படும் பல வண்ணங்களில் எவ்வளவு அபாயங்கள் உள்ளன தெரியுமா?

இதனால் உங்களுடைய உடல் நலனுக்கு குறிப்பாக சிறு குழந்தைகளின் உடல் நலனுக்கு பெரிய அளவில் ஊறு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வீட்டுச் சுவர்களில் தீட்டும் வர்ணங்களில் உள்ள மாசுபடுத்தும் பொருட்களினால் லுக்கேமியா என்னும் ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்த நோய்கள் ஏற்படலாம் என்று ஹாங்காங்கில் உள்ள ச்சியா கோச்சியாங் என்ற மருத்துவர் கூறுகின்றார். அவரிடம் ஹார்பின் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி சிகிச்சை பெறுகின்றான. அந்தச் சிறுமியின் பெற்றோர் கடந்த நவம்பரில் வீட்டுக்கு புது வர்ணம் பூசினார்கள். உடனே அவனுக்கு அடிக்கடி தும்மலும் இருமலும் வந்தது. சளிப்பிடித்திருக்கலாம் என்று அம்மா அலட்சியமாக இருந்து விட்டாள். நிலைமை சீரடையாமல் போகவே ஹார்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவளுக்கு வந்திருப்பது ரத்தப்புற்று நோய் என்று தெரியவந்தது.

ஹார்பின் நகரில் குழந்தைகளிடையே மிக அதிக அளவுக்கு ரத்தப்புற்று நோய் இருப்பதாக அந்த மருத்துவமனையின் ரத்த நோய் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் மா ஜுன் கூறினார். இதற்கு முக்கிய காரணம் டைமிதைல் பென்ஸீன் எனும் ரசாயனப் பொருள்.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவு என்பதால் உள் அலங்கார வர்ணங்களில் இருந்து வெளிப்படும் வாசனை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்றும் அவர் சொன்னார். மருத்துவர் மாவின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ரத்தப் புற்று நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பாதிப்பேருக்கு பள்ளியிலும் வீடுகளிலும் பூசப்படும் வர்ணத்தில் உள்ள பென்ஸீன் ரசாயனப் பொருளின் மாசு பாதித்துள்ளது. வெளிப்புறத்தில் வீசும் காற்றினால் ஏற்படும் மாசை விட வீட்டுக்கு உள்ளே உள்ள காற்றில் கலந்துள்ள மாசு இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றது. வீட்டு அலங்காரப் பொருட்களில் இருந்து வெளிப்படும் பென்ஸீன் மற்றும் பாஃர்மால் டிஹைடு போன்ற வாயுகளை நீண்ட காலத்திற்கு சவாசிக்க நேரிட்டால் படிப்படியாக சுவாச நோய்கள் ஏற்பட்டு ரத்தப் புற்று நோய் போன்ற ரத்த நோய்களாக மாறலாம் என்றும் ஹார்பின் நகர உள்புற சூழல் கண்காணிப்பு இயக்குநர் ச்சாவோ ஹோங்பெஃங் கூறுகிறார்.

இத்தகைய நிலையில் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்காக ஹார்பின் நகரில் நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு விஷயம் தெரியுமா? முன்பெல்லாம் வீடுகளில் ஆண்டுக்கு ஒரு முறை வெள்ளையடிப்பார்கள். இதற்காக இயற்கையான சுண்ணாம்புக்கற்களை நீர்த்து பயன்படுத்துவார்கள். அதிலுள்ள காரத்தன்மை பூச்சிபொட்டுகளை ஒழித்து விடும், மேலும் இயற்கைப் பொருளான சுண்ணாம்பினால் எவ்வித ஆபத்தும் ஏற்பட்டதில்லை. செயற்கை என்றைக்கும் அபாயகரமானது இல்லையா?