• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-17 19:28:00    
சுன் சி

cri

ராஜா—கடந்த ஜுன் 11ம் நாள் சீனாவில் டிராகன் படகு திருவிழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் நான், படகுப் போட்டியைப் பார்க்க வில்லை. ஆனால், அந்த விழாவுடன் தொடர்புடைய இன்னொரு ருசியான சமாச்சாரம் பார்த்தேன். கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரு பலகாரம் வாங்கிக் கொண்டு இருந்தார்கள். இலையில் வைத்து சமோசா போல சுருட்டி, நூலால் கட்டி ஆவியில் வேக வைக்கப்பட்ட தின்பண்டம். கலைமகள், இந்தப் பண்டத்திற்கு என்ன பெயர்?

கலை—ஓ, அதுவா, அதை சீன மொழியில் சுன் சி என்பார்கள். டிராகன் படகு விழாவின் போது இதை எல்லோரும் கண்டிப்பாக தின்ன வேண்டும். ராஜா, நீங்கள் தின்றீர்களா?

ராஜா—ஆமாம். கலையரசி அவர்கள் வீட்டிலே சமைத்து எடுத்துவந்து, நமக்கு எல்லோருக்கும் கொடுத்தாரே. சரி, இதன் பின்னணியில் ஒரு சுவையான குட்டிக்கதை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். செல்லப்பட்டுமா?

கலை—சொல்லுங்க

ராஜா—டிராகன் படகு விழா, பண்டைய விவசாய மதச் சடங்கில் இருந்து தோன்றியது என்கிறார்கள். சந்திர நாள் காட்டியின் படி, ஜந்தாவது திங்களில் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டு, வயலில் நாற்றுக்கள் அழிந்து போயின.

ஆகவே, வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தி, அமோக விளைச்சல் காண உதவும் படி வேண்டிக்கொண்டு விவசாயிகள் நதியில் அரிசியையும், மதுவையும் கொட்டினார்களாம்.

இன்னும் ஒரு கதையும் சொல்கிறார்கள். ச்சு வமிசத்தில் சு யுவான் என்றொரு நேர்மையான அமைச்சர் இருந்தார். அவர் ஒரு புகழ்மிக்க கவிஞர். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், தற்போது மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள மிலுவோ ஆற்றில் ஐந்தாவது திங்களின் ஐந்தாவது நாளன்று குதித்து மூழ்கிவிட்டார். அவரது உடலை மீன்கள் தின்று விடாமல் தடுப்பதற்காக உள்ளூர் மக்கள் ஆற்றில் ரப்பர் அரிசியால் செய்யப்பட்ட டம்ப்ளிங்குகளைப் போட்டனர். சரி, இந்த தின்பண்டத்தை எப்படிச் செய்வது? கலைமகள், நீங்கள் சொல்றீங்களா?

என்னென்ன பொருட்கள் தேவை?

கலை—சமைத்தால் கையில் பிசுக்பிசுக் என ஒட்டிக்கொள்ளக் கூடிய ரப்பர் அரிசி அல்லது பசை அரிசி, உள்ளே வைக்கப்படும். பூரணத்திற்காக இனிப்புக்கு சிவப்பு அவரைப்பருப்பு, பேரீச்சம் பழம்.

ராஜா—சரி, இதை எப்படி சமைப்பது?

கலை—முதலில், மூங்கில் அல்லது நாணல் இலையை சமோடா போல, முக்கோணமாக சுருட்டி, அதற்குள் வேகவைத்த பசை அரிசி சோறு, சிவப்பு அவரைப்பருப்பு பேரிச்சம் பழம் கொட்டை இல்லாமல் வைக்க வேண்டும். பிறகு, இலையை சுருட்டி நன்றாக மடித்து மூடி, நூலால் கட்டவும்.

ராஜா—அடுத்து, ஆவியில் வேக வைக்கப்படும். சரியா?

கலை—சரிதான். சுன்சி, வாணலியில் நீர் விட்டு, பத்து நிமிடம் நீராவியில் சுன்சியை வேகவிட வேண்டும் பிறகு, சுவையான இந்த பாரம்பரிய உணவு தயாரிப்பது.

ராஜா—சரி, சுவையுங்கள் அன்புள்ள நேயர்களே. அடுத்த முறை, பப்பாளியும் முட்டையும் கலந்த தின்பண்டத்தை அறிமுகப்படுத்துவோம்.

கலை—ஆமாம், பப்பாளிப் பழம், முட்டை, பால், சர்க்கரை ஆகியவை முன்கூட்டியே தயாராக எடுத்துவைத்திருங்கள்.