குவொ சுசான் அம்மையார், சீனாவின் புகழ்பெற்ற பாடகி, குரல் இசை ஆசிரியர் ஆவார். கடந்த 50 ஆண்டுகளாக அவர் சீன இசையின் வளர்ச்சியில் முயற்சி செய்து, மாபெரும் சாதனை பெற்றுள்ளார். அடுத்து அவர் பற்றி கூறுகின்றோம்.
கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகள் முதல் 90 ஆண்டுகள் வரை, குவொ சுசான், உள் நாடு மற்றும் வெளிநாடுகளின் இசை அரங்குகளில் சுறுச்சுறுப்பாக பாடினார். அவர், பல மொழிகளில் பல நாடுகளின் பாடலைப் பாட முடியும்.
கலைப் பாதையில் செல்வது பற்றி பேசிய அவர், தாம், வட சீனாவின் தியான்சின் மாநகரிலுள்ள வணிகர் குடும்பத்தில் பிறந்தாகவும், பெற்றோரின் கல்வி அறிவு உயர்வாக இல்லாததால், கலை உணர்வோடு, கலையில் ஈடுபட துவங்கியதாகவும் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
தியான்சிங்கில் நாடகம் அரங்குகள் நிறைய இருந்தன. குழந்தை காலம் முதல் நாடகத்தைப் பார்ப்பது, எனக்கு பிடிக்கும். பாடல் மற்றும் பெய்ஜிங் இசை நாடகத்தைப் பாட விரும்புகின்றேன். துவக்கத்தில் கேட்டு, பின்பு, மெதுவாக பாட கற்றுக்கொண்டேன். அப்போது அதிகமான தேசிய இன கலை நிறைந்த பாடல்களை கேட்டுள்ளேன் என்றார் அவர்.
இடைநிலை பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் அப்போதைய பெய்ஜிங் கலை சிறப்பு பள்ளியில் சேர்ந்தார். 1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் குரல் இசை கல்வி லட்சியம் வளர துவங்கியது. 1953ம் ஆண்டில், குவொ சுசான் தேர்வில் தேறி, நவ சீனாவின் முதலாவது தொகுதி வெளிநாட்டுக் கல்வி கற்ற மாணவராக, சோவியத் யூனியனின் மாஸ்கோ சக்வூஸ்கி இசை கல்லூரியின் குரல் இசை பிரிவில் சேர்ந்து படிக்க துவங்கினார்.
வெளிநாட்டில் 5 ஆண்டுகளின் படிப்பு வாழ்வில், அவர், உலகில் முன்னேறிய கலை கல்வியைப் பெற்றார். இதை நினைத்துப் பார்த்த போது, அவர் கூறியதாவது
சோவியத் யூனியனில் இசை கல்வி நிலைமை நன்றாக இருந்தது. அங்கே அமைப்பு முறையில் பயிற்சி பெற்றுள்ளோம். இதுவே, எனக்கு மிகவும் முக்கியமானது. சோவியத் யூனியனில் படிப்பது, என்னைப் பொருத்தவரை மிக முக்கியமானது என்றார் அவர்.
1958ம் ஆண்டில், குவொ சுசான் அதிக மதிப்பெணுடன் படிப்பை முடித்தார்.
சோவியத் யூனியனில் படித்த போது, அவர் பல பெரிய ரக கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 1957ம் ஆண்டில் நடைபெற்ற 6வது சர்வதேச இளைஞர் விழாவின் பண்டைய இசை போட்டியில் அவர் முதலாவது பரிசையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். படிப்பு முடிந்த பின்பு, அவர் மாஸ்கோவிலுள்ள புகழ்பெற்ற நாடக அரங்கில், சக்வூஸ்கி எழுதிய எப்கேனி ஒனொக்கின் எனும் நாடகத்திலும், புஷ்க்கின் எழுதிய கலைஞரின் வாழ்வு எனும் நாடகத்திலும் வெற்றிக்கரமாக பாடினார். அப்போதைய அனைத்து சோவியத் யூனியன் வானொலி நிலையம், அவரின் ஒலி நாடாவை ஒலிப்பரப்பியது. அவரின் பெயர் மாஸ்கோ இசை கல்லூரியில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
|