
ஆசிய பில்லியர்ட் சம்மேளனமும், சீனப் பில்லியர்ட் சங்கமும் ஏற்பாடு செய்யும் மூன்றாவது ஆசிய பில்லியர்ட் தொழில் முறை ஒப்பன் போட்டி ஜுன் திங்கள் 18ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை சீனாவின் சென்சென் நகரில் நடைபெறும். இந்த போட்டிக்கு சீனா வலுவான அணியை அனுப்பியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற வீரர் திங் சுன் ஹுய் இடம்பெறும் சீன அணி, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட், சீன ஹாங்கா ஆகியவற்றின் வீரர்களுடன் போட்டியிடும். இந்த போட்டியில் தனியார் மற்றும் குழு விளையாட்டுகள் அடங்கும். தனியார் போட்டியின் இறுதிப் பந்தயம் பெய்சிங்கில் நடைபெறும்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சைகிள் போட்டி நிகழ்ச்சிகளை சர்வதேச சைகிள் பந்தய சங்கம் கூட்டணி அண்மையில் சரிப்படுத்தியுள்ளது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேற்று நிலத்தில் ஆண், பெண் சிறு சக்கர சைகில் விரைவு சைக்கிள் போட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தளத்தில் ஆடவருக்கான ஒரு கிலோமீட்டர் தனியார் சைக்கிள் போட்டியும், மகளிருக்கான 500 மீட்டர் தனியார் ஓட்டப் போட்டியும் நீக்கப்படும் என இந்த சங்கம் முடிவு செய்துள்ளது.
இலக்கு சுடும் போட்டி 2005 உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் ஜெர்மன் சுற்று ஜுன் திங்கள் 12ஆம் நாள் நிறைவடைந்தது. சீன வீரர் தான் சுங்லியங் கடைசி நாள் மிகவும் சிறப்பாக விளையாடினார். ஆடவருக்கான பத்து மீட்டர் ஏர் கைதுப்பாக்கி சுடும் போட்டியில் 690.3 புள்ளி என்ற மொத்த சாதனையுடன் தங்கப் பதக்கம் பெற்றார்.

வாலி பால் 21வது சுவீட்சர்லாந்து மகளிர் போட்டி ஜுன் திங்கள் 12ஆம் நாள் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் சீன அணி 2-3 என்ற செட் கணக்கில் பிரேசில் அணியிடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றது. பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தாலி அணி 3-0 என்ற செட் கணக்கில் ஜப்பானிய அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றது.
சர்வதேச ஆடவர் வாலிபால் அழைப்புப் போட்டி ஜுன் 12ஆம் நாள் அமெரிக்காவின் சந்தியாகோவில் நிறைவடைந்தது. சீனா 3-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றது. 8ஆம் நாள் துவங்கிய இப்போட்டியில் சீன அணி ஆஸ்திரேலியா நெதர்லாந்து அமெரிக்கா ஆகிய அணிகள் கலந்துகொண்டன. 12ஆம் நாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
|