• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-23 12:24:02    
உலகில் விளையாட்டுப் போட்டிகள்

cri

REEBOK தடகளப் போட்டி ஜுன் திங்கள் 11ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பெற்ற சீன வீரர் லியூ சியாங் போட்டியில் திறமையுடன் ஓடவில்லை. இறுதியில் 13.11 வினாடி என்ற சாதனையுடன் மூன்றாம் இடம் பெற்றார். அமெரிக்க புகழ்பெற்ற வீரர் அலன். ஜோன்சன் 13.03 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பெற்றார். அத்துடன் இவ்வாண்டின் மிக சிறந்த சாதனையை உருவாக்கினார். அமெரிக்காவின் மற்றொரு வீரர் ஆர்னோல்ட் 2ஆம் இடம் பெற்றார்.

கால்பந்து 2005 சர்வதேச இளைஞர் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டி 10ஆம் நாள் நெதர்லாந்தில் துவங்கியது. பீ பிரிவில் சீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியைத் தோற்கடித்து எதிர்பாராத வெற்றி பெற்றது. சீன வீரர் சௌ சியு யி ஆட்டம் முடிவடைவதற்கு இரண்டு வினாடியே இருந்த போது, சீன அணிக்கு ஒரு கோல் போட்டு வெற்றி தேடித்தந்தார். இறுதிப் போட்டி ஜூலை தீங்கள் 2ஆம் நாள் நெதர்லாந்தின் UTRECHT நகரில் நடைபெறும்.

குத்துச் சண்டை ஜுன் 11ஆம் நாள் உலகின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆறாவது சுற்று நிறைவடைந்த பின் போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவர், அயர்லாந்து வீரர் KEVIN MCBRIDE இடம் தோல்வி கண்டதாக நடுவர் தீர்ப்பளித்தார். இந்த போட்டியில் தோல்வியுற்ற பின், 39 வயதான டைசன் இனிமேல் குத்துச் சண்டை மேடையில் ஏறாமல் இருக்கலாம்

லைபீரியாவின் கால்பந்து நட்சத்திர வீரர் GEOGE WEAH இன் பிரியாவிடைப் போட்டி ஜுன் திங்கள் 11ஆம் நாள் பிரான்சின் MARSEILLES நகரில் நடைபெற்றது. போட்டியில் அவர் மூன்று கோல்கள் போட்டு, தமது கால்பந்து விளையாட்டுக்கு ஒரு அழகான முற்றுப்புள்ளி வைத்தார். ஆப்பிரிக்க கால்பந்து வரலாற்றில் மகத்தான நட்சத்திர வீரரான GEOGE WEAH, 1995ஆம் ஆண்டு ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கால்பந்து மீஸ்டர் என்ற புகழை பெற்ற முதல்வராவார்.