சிங்கியாங்கில் எரியாற்றல் தளத்தை உருவாக்கும் வாய்ப்பு பக்குவமடைந்துள்ளது என்று சீனத் துணை தலைமை அமைச்சர் ஸெங் பே யிங் கூறியுள்ளார். நேற்று சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தின் குர்லே நகரில் பேசிய அவர், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். நெடுநோக்குடன், சிங்கியாங்கை, சீனாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தளமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார். ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய அவர், சிங்கியாங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுத்தொழில் நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வயல்கள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி வேகமாக அதிகரித்துள்ளது என்றார், அவர். அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளில், சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி தளமாகவும், மேற்கு பகுதியின் முக்கியமான எண்ணெய் மற்றும் ரசாயன தொழில் தளமாகவும் சிங்கியாங்கை ஆக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
|