• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-20 09:56:58    
தங்க சங்கரபாண்டியனின் கடிதம்

cri
ரா-------சென்னை மணலி புதுநகர் நேயர் தங்க சங்கரபாண்டியன், சீன வானொலியின் உணவு அரங்கம், சீனக்கதை நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளன என்று பாராட்டியுள்ளார். அடுத்து கோவை மாவட்டம் விங்கனூர் நேயர் கபாடன் என்னும் ஆர் கே மணிகண்டன், மார்சு திங்களில் ஒலிபரப்பான நட்பு பாலம் நிகழ்ச்சியில் நாச்சிமுத்துவை கலையரசி பேட்டி கண்ட போது, சீன நெசவுத்தறிகளின் பற்றி கூறிய கருத்தும் சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சியில் அமெரிக்காவில் பணியாற்றும் சீனர்கள் பற்றி எஸ் செல்வம் விளக்கியதும் நன்றாக இருந்தன என்று பாராட்டியுள்ளார். இலங்கை புதிய காத்தாங்குடி நேயர் ஏ. பி, ஏ சமோத் நிகழ்ச்சிகளுக்குப் பொதுவான பாராட்டுத் தெரிவித்துள்ளார். வி--------பறாட்டுக்களுக்கு நன்றி நேயர்களே. ரா-------ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி நேயர் எம் முத்துப் பாண்டியன் நமது ஏப்ரல் முதல் வார நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, சீனாவில் இன்பப் பயணம் என்ற நிகழ்ச்சியில் ஊத்தா மலை பற்றிய தகவல்கள் சுவையாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வளவனூர் நேயர் வ உ கல்பனா சீன வானொலி மூலம் பல வெளி நாட்டுச் செய்திகளை அறிய முடிகிறது என்று எழுதிவிட்டு தினம் ஒரு குறள் ஒலிபரப்பலாமே என்று கேட்கிறார். திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் நேயர் கா அருன் ஏப்ரல் முதல் நாள் ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சி புதுவை நேயர் மன்ற தயாரித்து வழங்கியது நன்றாக இருந்தது என்று பாராட்டி விட்டு, அதில் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்த கருத்துக்களை சீன வானொலி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை ராமியம்பட்டி எஸ் நவீனும் பாராட்டுகிறார். மீனாட்டி பாளையம் கா அருண் மார்ச் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளையும் பாராட்டியுள்ளார். வி--------பாராட்டிக்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி. அடுத்த கடிதம். ரா-------அடுத்து, நீலகிரி மாறுபடம் கீழ்குந்தா நேயர் கே கே மோகன், மார்ச் திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டிவிட்டு 30.3 2005 அன்று நேயர் நேரம் நிகழ்ச்சியில் அமெரிக்க நேயர் ஆல்பர்ட் பல நல்ல கருத்துக்களைக் கூறினார். தமிழ் சீனம் என்பது ஒரு ஒரு கூட்டுக் குடும்பம் போல, சீனாவிலும் அமெரிக்காவிலும், இலங்கையிலும் எனக்கு சொந்தபந்தங்கள் இருப்பது போல தோன்றுகிறது. சீன வானொலி கேட்ட பிறகு எனக்கு பல நல்ல நணபர்கள் கிடைத்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் மணமேடு தேவராஜா என்று குறிப்பிட்டுள்ள நேயர் போஜன் சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சிக்காக ஒரு தகவல் தெரிவிக்கிறார்.