• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-21 14:15:01    
ஒரு தகவல்

cri
ஒரு தகவல் தெரிவிக்கிறார். வி------அப்படியா. என்ன தகவல் ரா-------தமிழ் நாட்டில் நாகர்கோவில் அருகே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வடிவமைப்பு சீனாவை நினைவிட்டுகிறது என்று கூறுகிறார். வி-------அப்படியா. இது பற்றி ஆர்வம் உள்ள நேயர்கள் அந்தக் கோயிலைச் சென்று பார்த்து நிழற்படம் எடுத்து அனுப்பலாம். விவரம் தெரிந்தவர்களிடம் பேட்டி எடுத்து ஒலிப்பதிவை அனுப்பலாம். சனிதானே. ரா-------சரிதான். அடுத்த, இலங்கை காத்தாண்குடி நேயர் எம் ஏ எம் சப்ராஸ், சீன எடுத்துக்களை எழுத பழக்க கற்க வேண்டுமாம். அதற்குரிய புத்தகங்கள் கிடைக்குமா. என்று கேட்கிறார். வளவனபர் கே, சிவக்குமார், சிற்றலை மாற்றத்திற்குப்பின் இரவில் முதல் ஒலிபரப்பு நன்றாகக் கேட்கிறது. இரண்டாவது ஒலிபரப்பு தெளிவாக இல்லை. காலையில் மறு ஒலிபரப்பும் நேரம் செல்லச் செல்ல திறன் குறைகிறது என்று எழுதுகிறார். சேலம் மாவட்டம் எஸ் நாட்டாமங்கலம் நேயர் ஏ மாதுராஜ், நமது ஏப்ரல் திங்கள் பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக மலர்ச்சோலை நிகழ்ச்சிய்ல் சேந்தமங்கலம் ராஜமாணிக்கம் திரட்டி அனுப்பி, மலர்விழி ஒலிபரப்பியது. ஒன்று நட்புப்பாலம் நிகழ்ச்சிய்ல சீனாவில் புரோட்டா போடும் உணவுக் கலைஞர் ராமநாதனின் அனுபவ அறிவு பலருக்கு வழிக்காட்டியாக இருக்கும் பெய்சிங் நகரின் பட்டுத்துணிகளை விற்கும் சூசே அங்காடியில் சுற்றுலாப் பயணிகள் 40 விழுக்காடு வரை விலையைக் குறைத்துக்கேட்டு பேரம் பேசி வாங்கலாம் என்ற தகவல் அனைவருக்கும் பயன் தரக்கூடியது என்று எழுதியுள்ளார். வி------பாராட்டுக்களுக்கு நன்றி. ரா------அடுத்த கடிதம் மணமேடு நேயர் எம் தேவராஜா எழுதியது. எப்ரல் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக தலைமை அமைச்சர் வென்சியாபாவின் இந்தியப்பயணம் தொடர்பான செய்திகள் சீன தேசிய இனக்குடும்பம் நிகழிச்சியில் சீனாவில் இஸ்லாமிய உணவுக்கு உத்தரவாதம் என்ற கட்டுரை, சீன அரசின் மதநல்லிணக்க கொள்கையை பிரதிபரிக்கிறது என்று எழுதியுள்ளனார். மதுரை அண்ணா நகர் என் இராமசாமி, நமது மார்ச் ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக. ஏப்ரல் 8 அன்று செய்தித் தொகுப்பை தமிழ்ச் செல்வன் அருமையாக வாசித்தார். 7ம் நாள் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி, சதுப்பு நில உயிரினப் பாதுகாப்பு பற்றி எடுத்துக்கூறியது நன்று என்று குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் உத்திரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா மார்ச் திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டியுள்ளார். குறிப்பாக,17-3-05 அன்று ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் மனச்சோர்வு பற்றிய தகவலும் நலவாழ்வுப் பாதுகாப்பில் வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவலும் நன்று என்று எழுதியுள்ளார். வி-------பாராட்டுக்களுக்கு நன்றி. அடுத்த கடிதம் யாருடையது. ரா-------வளவனூர் பி இளங்கோவன் ஏப்ரல் திங்கள் 12ம் நாள் ஒலிபரப்பான செய்திகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, தமது கருத்துக்களை எழுதியுள்ளார். திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் நேயர் க, அருண், நமது ஏப்ரல் மே திங்கல் நிகழ்ச்சிகளைப் பாராட்டி எழுதியுள்ளார். மேலும் சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களின் வரலாறு பற்றி தொகுத்து ஒரு நூலாக்கி, நேயர்களுக்கு வழங்கலாமே என்று யோசனை கூறிகிறார். வி-------யோசனைக்கு நன்றி. இந்த நோக்கில் தொகுப்பு ஒன்று தயாராகிறது. இணையத்திலே வெளியிடப்படலாம் ரா--------தமிழகத்தைப் பொறுத்த வரை கிராமங்களஉக்கு கணினி எட்டாக கனியாகவே உள்ளது. மொழிப் பிரச்சினையும் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மின்னஞ்சல் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சில நேயர்களைத் திருப்திப்படுத்த வேண்டாம் என்று காரசாமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். வேலூர் மாவட்டம் ராமபாளையம் நேயர் முனுகப்பட்டு கண்ணன் சேகர்.