• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-24 11:19:22    
மின்னஞ்சல் பற்றிய தகவல்

cri
வி-------நேயர் கண்ணன் சேகர். கோபம் வேண்டாம். நாங்கள் பாரட்சம் காட்டுவதில்லை. மின்னஞ்சல்கள் நிகழ்ச்சி பற்றி உடனுக்குடன் கருத்துத் தெரிவிப்பதால் அவற்றையும் கலந்து தருகிறோம். இன்றைக்கு கூட இது வரை மின்னஞ்சல் இடம் பெறவில்லை. எனவே மின்னஞ்சலுக்கு பின்னுரிமை தான் கொடுக்கிறோம். சரி, ராஜா மின்னஞ்சல்களைப் பார்க்கலாமா. ரா-------புதுவை என் பாலகுமார் கடந்த ஜீன் 8 ம் நாள் ஒலிபரப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியைப் பாராட்டிவிட்டு, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பல புதிய நேயர்கள் அனைத்தையும் பாராட்டியே கூறுகிறார்கள். இது போன்ற பேட்டிகல் சீன வானொலியின் தரத்தை குறைவாக மதிப்பிட வைக்கும் என்று தமது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். பிகார் மாநிலம் முஸாபர்ழரில் இருந்து முகோஷ் குமார் என்னும் வானொலி நேயர் தமது மின்னஞ்சலிலின் இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் அறை கூவலை குறிப்பிட்டு எழுதியுள்ளார். வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் தம்முடைய வான் அஞ்சலில் மார்ச் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, பீங்கான் பாண்டங்களின் வரலாறு பற்றிக் கூறிய சீனப் பண்பாடு, மணம் முடிக்கும் முன்பு செய்ய வேண்டிய உடல்பரி சோதனை பற்றி விளக்கிய அறிவியல் உலகம் ஆகிய நிகழ்ச்சிகளைப் பாராட்டி விட்டு நேயர் நேரம் நிகழ்ச்சியில் நேயர்களின் கருத்துக்களை வெறுமனே படித்து விடாமல், இடையிடையே கருத்துக்களைத் தெரிவிப்பது நல்ல வழிமுறை என்று கூறுகிறார். வளவனூர் புதுப்பாளையம் செல்வம் தமது மின்னஞ்சலில் மே திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டி விட்டு, நட்புப் பாலத்திற்காக நேயர்களைச் சார்ந்திருக்காமல் நீங்களாகவே விறுவிறுப்பாகத் தயார் செய்கிறீர்கள். இப்போது நிறைய தமிழர்களின் பேட்டிகள் சீன வானொலியில் இடம் பெறுகின்றன. மே 10ம் நாள் சீனப் பன்பாடு நிகழ்ச்சியில் இருப்புக் நடனம் என்ற வார்த்தை சரியாகப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். வி-------நேயர்களின் கருத்துக்களுக்கு நன்றி. நேயர் நேரத்தில் இடையிடையே நாங்கலும் கருத்துக் கூறுவதற்குத் தூண்மே படியாக நேயர்களின் கடிதங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ராஜா இருப்புக் கொட்டு நடனம் என்றால் என்ன ரா--------waist drum dance-----அதாவது இரும்பிலே வரிசையாக பல சிறு கொட்டுக்களைக் கட்டிக் கொண்டு, அவற்றைத் தட்டியபடியே குதித்துக் குதித்து ஆகுவது. சரி, இத்துடன் இன்றைய நேயர் நேரம் நிறைவு செய்யலாமா ஆமாம் வணக்கம் நேயர்களே