• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-21 14:17:56    
காண்டாமிருகக் கொம்பு மாத்திரை

cri
நீண்டகாலமாக நினைவிழந்த நிலையில் இருக்கும் ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தடை செய்யப்பட்டுள்ள ஒரு சீனப் பாரம்பரிய மருந்தைத் தேடி சீனா முழுவதும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ச்சியாங் ச்சியாங் எனும் 3 வயதுச் சிறுவன் கடந்த ஏப்ரல் திங்களில் கிழக்கு சீனாவின் செச்சியாங் மாகாணத் தலைநகரான ஹங்ச்சோவில் தனது தாயாருடன் சேர்த்து கடத்திச் செல்லப்பட்டான். ஒரு ஆளினார் கடத்தப்பட்ட போது அந்தத் தாய் காரோட்டிக் கொண்டிருந்தார். ஷங்கைக்கு காரை ஓட்டுமாறு கடத்தல்காரர் கட்டளையிட்ட போது அந்தத் தாய் ஒரு வழியாகத் தப்பி விட்டார். ஆனால் அவருடைய மகனை கடத்தல் காரன் பிடித்து வைத்துக் கொண்டரான். போலீஸ் அவனை சுட்டுக் கொண்றது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 வயதுச் சிறுவன் ச்சியாங் ச்சியாங் படுகாயமடைந்து நினைவிழந்த நிலைக்கு தள்ளப்பட்டான்.

அவனை உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு குறிப்பிட்ட சீன பாரம்பரிய மருந்து தேவைபடுகின்றது. அங்கோங் பெஜோர் என்ற அந்த மாத்திரை சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்ப்ட்ட காண்ட மிருகத்தின் மொம்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. மருந்துத் தயாரிப்புக்காக அரிய விலங்கினங்களைப் பயன்படுத்துவது சீனாவில் தடை செய்யப்பட்டது. ஆகவே எருமைகளின் கொம்பைக் கொண்டு அந்த மாத்திரை இப்போதும் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் அதில் அவ்வளவாக வீர்யம் இல்லை என்று மருத்துவதர்கள் கூறுகின்றனர். காண்டா மிருகத்தின் கொம்பைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் பாரம்பரிய மருந்துகளைத் தயாரிக்கும் முன்ணி நிறுவனமான டோங்ரென்ட்டாங் தயாரித்தது. அந்த மாத்திரை இப்போது கிடைக்குமா என்று அந்த அன்னை தேடினாள். அவரோடு சேர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த மருந்து வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவரான ஷாங்கையில் வசிக்கும் 75 வயது முதியவரான ஜியாங் பெஃங் தன்னிடம் வந்த மாத்திரை இருப்பதாக கூறினார். 16 ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்காக அந்த மாத்திரைகளை வாங்கியதாகக் கூறினார். தாயார் குணமடைந்து விட்டார். மீதியுள்ள மாத்திரைகளை 3 வயதுச் சிறுவனக்காகத் தருவதற்கு அவர் முன்வந்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் 75 வயதான ஜியாங் பெஃன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அவருக்கு இந்த மாத்திரை பயன்படக் கூடும். ஆனாலும் "என்னுடைய ஆயுளோ மிகவும் குறுகியது. சிறுவனோ இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும். எனவே இந்த அரிய மாத்திரைகளை அவனுக்குத் தருகின்றேன். அவனுக்குத் தான் இது மிகவும் தேவை"என்று கூறிவிட்டார்.

அது மட்டுமா பெய்சிங்கிலும் ஷாங்கையிலும் உள்ள செய்தி நிறுவனங்கள் உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் தொலை பேசி இணைப்புக்களை ஏற்படுத்தி அரிய மருந்து பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கின. உடனே ஆயிரக்கணக்கான அழைப்புக்கள் வந்தன. "நாடெங்கும் உள்ள மக்கள் இவ்வளவு பலிவும் அக்கறையும் காட்டுவார்கள் என நான் தெரிப்பார்க்கவில்லை"என்று அந்த வுன்னை கூறுகிறார்.

இருபதாண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட அந்த காண்டாமிருக்கக் கொம்பு மாத்திரை ஒன்றைக் கொடுத்ததும் சிறுவனின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் தெரிகிற்து. ஆனாலும் அவன் அபாயகட்டத்தைத் தாண்டவில்லை. எனவே சீனப் பாரம்பரிய மருந்தையும் மேற்கத்திய மருந்துகளையும் கலந்து கொடுத்து அவனைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.