சீனாவின் வசந்த நாள்காட்டி யின் படி வசந்த கால மே திங்கள் 5ம் நாள் சீனாவின் பாரம்பரிய சுசியம் விழாவாகும். இது துவான் யான், மறுப்பு 5, துவான் வூ விழா என அழைக்கப்படுகின்றது. சோ வம்சகாலத்தில் வசந்த கால மே திங்கள் 5ம் நாளில் முடியை சேகரித்து குளிக்க வேண்டும் என்ற பழக்கவழக்கம் பரவியது. இன்றைய யுகத்தில் இந்த விழா சீனாவின் மகத்தான கவிஞர் சியூ யான் அவர்களுடன் தொடர்புடையது.
போர் காலத்தில் சூ அரசுக்கும் சிங் அரசுக்குமிடையில் அதிகாரப் போட்டிக்கான போர் தீவிரமாக நடைபெற்றது. அப்போதைய கவிஞர் சியூ யான் சூ மன்னரால் மிகவும் போற்றப்பட்டார். ஆனால் அவருடைய கருத்துக்கு மற்ற உயர் அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சூ மன்னரின் முன்னாள் சியூ யானை பற்றி கோள் மூட்டினார்கள். படிப்படியாக சூ மன்னர் சியூ யான் மீது அன்பு இழந்தார். மாபெரும் எதிர்கால ஆர்வம் கொண்ட சியூ யான் மிகவும் வேதனையடைந்தார். துன்பத்துதடன் "லீ சோ","தியென் சியான்"எனும் இறவாதன்மை வாய்ந்த கவிதைகளை படைத்தார். கி.மு.229ம் ஆண்டில் சிங் அரசு சூ அரசின் 8 நகரங்கள் கைபற்றிய பின் சமாதானம் பற்றி விவாதிக்கவருமாறு சூ மன்னரை அழைத்தது. சியூ யான் சிங் மன்னரின் சூழ்சியை உணர்ந்து பின்விளைவை பொருட்படுத்தாமல் சூ மன்னரிடம் அறிவுரை கூறினார். அதைக் கேட்பதற்கு பதிலாக சியூ யானை தலைநகரிலிருந்து விரட்டிய சூ மன்னர் சிங் அரசுக்குச் சென்றார். அங்கு போய்ச் சேர்ந்ததும் சிறையில் வைக்கப்பட்டார். சூ மன்னர் வருத்தமடைந்து நோய்வாய்பட்டு 3 ஆண்டுகளுக்கு பின் சிங் அரசில் மரணமடைந்தார். அப்போது முதல் சூ அரசு பலவீனமாகி சற்று காலத்துக்கு பின் சிங் படைவீரர்கள் சூ அரசை தாக்கி வெற்றி பெற்றனர். அப்போது சியூ யான் வேறு ஊரில் விரட்டியடிக்கப்பட்டார். மோசமான செய்தியை கேட்ட பின் நம்பிக்கை இழந்த அவர் நீர் நிரம்பி ஓடிய பிலோ ஆற்றில் குதித்து மரணமடைந்தார்.
மீனவர்களும் மக்களும் கவிஞர் சியூ யான் தற்கொலை செய்த செய்தியை கேட்டதும் ஆற்றில் அவருடைய உடலைத் தேடி கண்டறிய முயற்சித்தனர். மீன்கள் சியூ யானை கடிக்காமல் இருக்க மக்கள் அடுத்தடுத்து வீட்டில் இருந்த சுசியங்களையும் முட்டைகளையும் ஆற்றில் வீசியெறித்தனர். மருத்துவர்கள் மஞ்சள் மதுவையும் ஆற்றில் ஊற்றினார்கள் சியூ யானை நினைவு செய்யும் வகையில் வசந்த நாள்காட்டியில் மே திங்கள் 5ம் நாள் வரும் போதெல்லாம் மக்கள் சுசியத்தை ஆற்றில் வீசி யெறிந்து மஞ்சள் மது குடிப்பர். படகு ஓட்டும் போட்டி நடத்துவர். துவு விழா இப்படியே பரவியுள்ளது.
இது பற்றி இன்னொரு கதை இருக்கின்றது. தான்சிச்சுன் ஆட்சிபுரிந்த காலத்தில் வுவான் சோ தலைமையில் படைவீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எங்கெங்கும் மக்களைக் கொலை செய்தனர். வுவான் சோ என்று கேட்டவுடன் மக்கள் தப்பி ஓடினர். தான்சிச்சுன் ஆட்சிக்காலத்தில் வுவான் சோ தலைமையிலான படைப் பிரிவுகள் ஹுநான் மாநிலத்தை தாக்கும் போது படைவீரர்கள் தன்சோ நகரை சுற்றி வளைத்தனர். வுவான் சோ குதிரையில் இருந்த வண்ணம் நிலவியல் அமைப்பைச் சோதித்தார். வழியில் பெண்மணி ஒருவரை அவர் சந்தித்தார். அந்த பெண்மணி பொதியுடன் கையில் குழந்தையைத் தூக்கிச் சென்ற அவசரமாக தப்பி ஓடினார். அவருக்கு ஆச்சரியம் வந்து விசாரித்தார். பெண்மணி வருமாறு பதிலளித்தார். "வுவான் சோ மனிதரை கொலை செய்யும் போது கண் மூட மாட்டார் விரைவில் தன்சோ நகரை தாக்குவார். நகரில் ஆண்கள் அனைவரும் நகரை காப்பாற்றும் வகையில் ஏவப்பட்டனர். நான் குழந்தையுடன் உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும்"என்றார் அந்த பெண்மணி. வுவான் சோ இந்த கூற்றைக் கேட்ட பின் அந்த பெண்மணி மீது வருத்தம் கொண்டார்."நீ வீட்டுக்கு திரும்பி போ, வாசலில் சான்பு மற்றும் ஹை சோ என்னும் மூலிகை செடியை தொங்கவிடு. வுவான் சோயின் படைவீரர்கள் இவற்றை கண்டு உங்கள் குடும்பத்தினரை தாக்கமாட்டார்கள்"என்று வுவான் சோ அந்த பெண்மணிக்கு கூறினார். சந்தேகத்துடன் அந்த பெண்மணி வீட்டுக்குத் திரும்பினார். இந்தச் செய்தியை மற்ற நகரவாசிகளிடன் கூறினார். அடுத்த நாள் துவான் வு விழா நாளும். வுவான் சோயின் படைவீரர்கள் நகரை தாக்கி கைபற்றிய பின் ஒவ்வொரு குடும்பத்தின் வாசலில் சான்பு ஹைசோ தொங்குவதை கண்டு வாக்குறுதியின் படி நகரவாசிகளை துன்பப்படுத்தாமல் நகரை விட்டு வெளியேறினார். இதை நினைவுபடுத்தும் வகையில் பின் துவான் வு விழா வரும் போது மக்கள் வாசலில் சான்பு ஹைசோ அவற்றை தொங்கவிடுவர். இதுவரை இந்த பழக்கம் தொடர்கின்றது.
|