சீன பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் லாபம்
cri
சீனாவின் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இவ்வாண்டின் முதல் 5 திங்களில் சுமார் 50 ஆயிரம் கோடி யுவான் லாபம் ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 15.8 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. முதல் 5 திங்களில், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு பங்கு முதலீட்டு தொழில் நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட வேறுபட்ட அளவில் அதிகரித்து வருகின்றது. ஆனால் அன்னிய நிறுவனங்கள் மற்றும் ஹாங்காங், மக்கெள, தைவான் ஆகியவற்றின் வணிகர்களும் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களின் லாபம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட குறைந்துள்ளது என்று புள்ளி விவரம் காட்டுகின்றது.
|
|