San Jiang Yuan எனும் அரசு நிலை இயற்கை பாதுகாப்புப் பிரதேசத்தை பராமரிக்க, சீனா 750 கோடி யுவானை முதலீடு செய்யும். விளை நிலத்தில் மீண்டும் புல் வளர்ப்பது, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது, உயிரின வாழ்க்கைச்சூழலுக்கான குடியேற்றம் முதலியவற்றுடன் இது தொடர்புடையது. சிங் ஹங்-திபெத் பீடபூமி மையப் பிரதேசத்தில் அமைந்துள்ள San Jiang Yuan பிரதேசம், மஞ்சள் ஆறு, யாங் சிங் ஆறு, லென் சாங் சியாங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளின் ஊற்றுமூலப் பிரதேசமாகும். அங்கு, ஏராளமான உயிரினங்கள் இருக்கின்றன. இது மட்டுமின்றி, இம்மூன்று ஆறுகளின் வடிநிலப்பகுதியில் வாழும் பல கோடி மக்களின் வாழ்க்கையுடனும் குடிநீர் பாதுகாப்புடனும் இப்பிரதேசம் நேரடி தொடர்புடையது.
|