வணக்கம் நேயர்களே, 你们好!தமிழ் மூலம் சீனம் எனும் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நான் தமிழ்ச் செல்வம்.
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். 听众们, 大家好!உங்களை மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்திக்கின்றேன். நான் வான்பதி.
கடந்த முறை நாம் மொத்தம் 4 உரையாடல்களை படித்துள்ளோம். எப்படி புரிந்ததா, கிரகித்துக் கொண்டீர்களா?
முதலில் இந்த 4 உரையாடல்களை மீண்டும் ஒரு முறை பார்க்கின்றோம்.
வான்மதி, முதலாவது உரையாடல் என்ன?
谢谢你!不要客气!
இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
谢谢你!
不要客气!
வான்மதி, இரண்டாம் உரையாடல் என்ன, நான் சொல்லட்டுமா?
நீங்கள் சொல்லுங்கள்.
谢谢您, 不用谢!
இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
谢谢您,
不用谢!
ஆசிரியர், மூன்றாவது உரையாடல் நான் சொல்லுகின்றேன்.
谢谢你们! 不谢,不谢!
இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
谢谢你们!
不谢,不谢!
நான்காவது உரையாடல் என்ன, வான்மதி நீங்கள் சொல்லுங்கள்.
多谢,多谢!
不要客气,你不要谢我!
வான்மதி இந்த உரையாடல் கொஞ்சம் நீளம், என்ன பொருள் நீங்கள் நேயர்களுக்கு மீண்டும் விளக்கிச் சொல்லுங்கள்.
சரி, நான் சொல்லுகின்றேன். 多谢 என்றால், மிக மிக நன்றி, என்று பொருள். பொதுவாக இரண்டு முறை சொல்ல வேண்டும். 不要客气 என்றால், உங்களை வரவேற்கிறோம். 你不要谢我 என்றால் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம் என்பது பொருள்.
இப்பொழுது நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
多谢,多谢!
不要客气,你不要谢我!
நேயர்களே, இந்த நான்கு உரையாடல்களை மீண்டும் ஒரு முறை பார்த்துள்ளோம். நீங்கள் ஏற்கனவே கிரகித்துக்கொண்டுள்ளீர்கள் என்று நான் நம்புகின்றோம்.
இன்று, இன்னொரு புதிய உரையாடலை படிக்கின்றோம்
வான்மதி புதிய உரையாடல் என்ன, நீங்கள் நேயர்களுக்கு தெரிவியுங்கள்.
太感谢了! 没什么!
நாங்கள் நேயர்களுக்கு ஒரு முறை படிப்போமா?
படிப்போம்.
太感谢了!
没什么!
வான்மதி இந்த உரையாடல் என்ன பொருள், நீங்கள் நேயர்களுக்கு விளக்கம் தாருங்கள்.
தருகின்றேன், 太 என்றால் அளவைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். மிகவும், அல்லது மிக,மிக என்று பொருள். 感谢 என்றால் நன்றி என்று பொருள், 谢谢 என்றும் சொல்லலாம். 感谢,谢谢, ஒரே பொருள். எனவே, இந்த வாக்கியத்தின் முழு பொருள் என்றால், மிகவும் நின்றி, அல்லது மிக மிக நன்றி என்று பொருள் தான்.
没什么 என்றால், பரவாயில்லை, நன்றி சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. என்று பொருள். ஆங்கிலத்தில் IT IS NOTHING.
இப்பொழுது நேயர்கள் இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.
太感谢了!
没什么!
|