• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-28 09:28:23    
எலும்பு புற்று நோய் செயற்கை

cri
ராஜா......புற்று நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் குணப்படுத்த முடியும் என்பது ஆறுதலான விஷயம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சத்தான உணவு, மன அமைதி போன்றவற்றைக் கூடுமான வரை கடைப்பிடித்தால் புற்றுநோய் வராமல் பெரும்பாலும் பார்த்துக் கொள்ள முடியும். இது பற்றிய தகவல் தருகின்றோம்.

கலையரசி.....எலும்புப் புற்றுநோய் என்றால் என்ன?

ராஜா.........எலும்பில் உருவாகி மற்ற இடங்களுக்குப் பரவும் புற்றுநோய் முதல் நிலை எலும்புப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்றது. உடலில் வேறு பாகத்தில் புற்று உருவாகி அது எலும்புக்கும் பரவும். இதை இரண்டாம் நிலை எலும்புப் புற்றுநோய் என்கிறோம்.

கலை.............பொதுவாக எந்த எந்த உறுப்புகளில்........

ஹாஜா......கால் முட்டி, கை மணிக்கட்டு, தோள்பட்டை போன்ற இடங்களில் முதல் நிலை எலும்புப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கலை.........அறிகுறிகள் என்ன?

ராஜா...........புற்றுநோய் அறிகுறிகள் அது எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பொருத்து நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடும். இருப்பினும் பொதுவாக புற்றுநோய் ஏற்பட்ட பகுதியில் வீக்கம், வலி, அப்பகுதியை இயல்பாக அசைக்க முடியாத நிலை, உடல் பலவீனம், சிலருக்கு எலும்பு முறிவு போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்பது நல்லது.

சாதாரணமாகவும் மூட்டு வலி வரலாம். ஆனால் மாத்திரைகள் எடுத்தும் வலி குறையவில்லை என்றால் புற்று நோயாக இருக்கலாம் எனச் சந்தேகிக்க வேண்டும் ஏனெனில் ஆரம்ப நிலையிலேயே புர்றுநோயைக் கண்டுபிடிக்கும் நிலையில் சிகிச்சை நல்ல பலனைத் தரும்.

கலை.......எந்த வயதினருக்கு?

ராஜா.....எந்த வயதிலும் வரலாம் என்றாலும் 10 முதல் 30 வயதுள்ளோருக்கு முதல் நிலை எலும்புப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இளம் வயதில் மூட்டுவலி வந்தால் அலட்சியமாக இருக்கக் கூடாது.

கலை.....எத்தனை வகை எலும்புப் புற்று நோய்கள் உள்ளன?

ராஜா.,.....எலும்புப் புற்றுநோயில் இரண்டு வகைகள் உள்ளன. பரவும் தன்மை கொண்டது. மற்றொன்று பரவாத தன்மை கொண்டது. பரவும் தன்மைப் புற்று நோயை "MALIGNANT CANCER" பரவாத புற்று நோயை "BENIGN CANCER"என்கிறோம். பரவாத புற்று நோயால் அதிக அளவு ஆபத்தில்லை. சிகிச்சைக்கு நல்ல பலன் உண்டு. ஆனால் பரவும் தன்மை கொண்ட புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.

கலை.....பரிசோதனைகள் என்ன?

ராஜா.....கிளினிக்கல் பரிசோதனையிலேயே 60 சதவிகிதம் உறுதிப்படுத்திவிடலாம். இருப்பினும் எக்ஸ்ரே, அதைத் தொடர்ந்து 'போன் ஸ்கேன்','சிடி ஸ்கேன்','எம் ஆர் ஆய் ஸ்கேன்' ஆகியவற்றின் மூலம் மிகத் துல்லியமாகப் புற்றுநோய் பரவியுள்ள அளவைக் கண்டறிய முடியும். ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்தினாலும் திசுப் பரிசோதனை('பயாப்ஸி')செய்து 100 சதவிகிதம் உறுதியாச் சொல்ல முடியும்.