ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, 2001 ஜுன் 15 அன்று, உருவாக்கப்பட்ட அரசுகளுக்கு இடையிலான ஓர் அமைப்பாகும். இது சீனா, ரஷியா, கஸகஸ்த்தான், கிர்கிஸ்த்தான், தாஜிகிஸ்த்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டதது.
இதனுடைய உறுப்பு நாடுகள் 30 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட பிரதேசத்தையும், 1.46 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் உள்ளடக்குகின்றது. இதன் அலுவல்சார் மொழிகள் சீன மற்றும் ரஷிய மொழிகள் ஆகும்.
ஷாங்காயின் ஐந்து செயல்முறையில் இருந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாகி வளர்ந்து வந்துள்ளது. இது சீனா, ரஷியா, கஸகஸ்த்தான், கிர்கிஸ்தான், கய்ஹுஸ்த்தான், தாஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளால் 1996இல் உருவாக்கப்பட்டது. இந்த நாடுகளின் எல்லைப் பிரதேசங்களில் ஆயுதக் குறைப்பு, நம்பிக்கையை வளர்த்து, பலப்படுத்துதல், வட்டார ஒத்துழைப்பை வளர்த்தல் போன்றவை இதன் இலக்குகள் ஆகும்.
2000மாவது ஆண்டில் உஸ்பெக்ஸ்த்தானின் அரசு தலைவர் ஐந்து ஷாங்காயின் துஷான்போ மகாநாட்டுக்கு ஓர் விருந்தினராக அழைக்கப்பட்டார். தொடர்ந்து வந்த ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஷாங்காயில் நிறுவப்பட்டது. இதனுடைய முதலாவது கூட்டத்தில் உஸ்பெக்ஸ்த்தான் ஓர் உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரண்டாவது மகாநாடு 2002 ஜுனில் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடத்தப்பட்டது. அரசுத் தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
மூன்றாவது மகாநாடு இரசியத் தலைநகர் மாஸ்கோவில் ரஷியாவுக்கான சீனத்தூதுவர் சாங் டெகுவாங் தலைமையில் நடைபெற்றது. அவர் முதலாவது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
நான்காவது மகாநாடு உஸ்பெக்ஸ்த்தான் தலைநகரான தாஷ்கென்ட்டில் நடத்தப்பட்டது.
ஐந்தாவது மகாநாடு கஸகஸ்த்தான் தலைநகரான அஸ்தானாவில் நடத்தப்படவிருக்கின்றது. இம்மகாநாடு இந்தியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளை பார்வையாளர்களைக பங்கு கொள்ள அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மாணிக்கும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிறுவனங்கள் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. அவை கூட்டங்களின் செயல்பாடு மற்றும் நிரந்தர பிரிவுகள் என்பனவாகும். மிக உயர்ந்த பிரிவு அரசுத் தலைவர்களின் அவை எனப்படுகிறது. நிரந்தர நிறுவனங்கள் பெய்ஜிங்கிலுள்ள செயலகம் மற்றும் தாஷ்கென்ட்டில் உள்ள வட்டார பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பினையும் உள்ளடக்கியதாக உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒப்பந்தம் மற்றும் பிரகடனத்தின் அடிப்படையில் இதன் முக்கிய நோக்கங்கள் வருமாறு
உறுப்பு நாடுகளுக்கிடையே சிறந்த அண்டை உறவையும் பரஸ்பர நம்பிக்கையையும் பலப்படுத்துதல். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கலாச்சாரம், கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், எரிசக்தி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் ஏனைய துறைகளில் ஒரு பயனுள்ள ஒத்துழைப்பை வளர்த்தல், வட்டார அமைதி, பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றை பேணுவதற்காக ஒன்று சேர்ந்து உழைத்தல், ஜனநாயகத்தையும் நீதியையும், பகுத்தறிவையும் பண்புகளாக கொண்ட ஒரு புதிய சர்வதேச அரசியல் பொருளாதார ஒழுங்கினை உருவாக்கி வளர்த்தல்.
|