• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-28 20:11:53    
பெய்சிங் ஒலிம்பிக் பற்றி

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்புடைய சந்தை வளர்ச்சியில் காணப்படும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையில், ஜுன் திங்கள் 20ஆம் நாள் சீனாவில் சர்வதேச விளையாட்டுப் பொருள் காட்சி சந்தை துவங்கியுள்ளது. இதில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாட்டுக் கமிட்டி ஒரு அரங்கு அமைத்துள்ளது. தற்போது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒலிம்பிக் கூட்டாளி திட்டத்தில் பங்கு கொள்ளும் 11 தொழில் நிறுவனங்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் மேலும் 8 தொழில் நிறுவனங்களும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒத்துழைப்புக் கூட்டாளிகளாக மாறும். இந்த சந்தையில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான 500 வகை சிறப்பு அனுமதி வணிகப் பொருட்கள் விற்கப்படும்.

இலக்கு சுடும் போட்டி உலக கோப்பைக்கான 2005 இலக்கு சுடும் போட்டியின் கடைசி சுற்று ஜுன் திங்கள் 20ஆம் நாள் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில், மேலும் 8 சீன வீரர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றுள்ளனர். இவ்வாறு சீன இலக்கு சுடும் அணியின் மொத்தம் 17 வீரர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஏனென்றால் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடான சீனாவின் 9 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை ஏற்கனவே இயல்பாகவே பெற்றுள்ளனர்.

கால்பந்து ஜுன் திங்கள் 17ஆம் நாள் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக இளைஞர் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சீன அணி 16 வலுவான அணிகளில் ஒன்றாக நுழைந்துள்ளது, பிரிவுப் போட்டியில் சீன அணி, துருக்கி, உக்ரைன், பனமா ஆகிய அணிகளைத் தோற்கடித்தது.

ஜுன் 19ஆம் நாள் சீனாவின் சாங்ஷா நகரில் சீனத் தேசிய ஆடவர் கால்பந்து அணிக்கும் கொஸ்டரிக்கா கால்பந்து அணிக்குமிடையே நடைபெற்ற ஒரு நட்புப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை போட்டு, சமம் செய்தன. சீன அணியின் சாங் யாவ் குன், சுன் சியாங் ஆகிய இருவர் சீன அணிக்கு தலா ஒரு கோல் போட்டனர்.