• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-28 14:14:32    
பொன் தங்கவேலனின் கருத்துகள்

cri
திரு வண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சங்காயாங்ச்சி தமிழ் நேயர் மன்றத்தின் பொன் தங்கவேலன் ஒரு குட்டி அகராதி தயாரித்திரும்பதாக மின்னஞ்சலில் கூறுகிறார். நாம் அனுப்பிய கைனாடுடே வார இதழ் மற்றும் தமிழ் மூல சீனம் குறிப்பேட்டை வைத்து ஒப்பிட்டு 60 சீனச் சொற்கள் அடங்கிய குட்டி அகராதியைத் தயாரித் திருப்பதாகக் கூறுகிறார். அகராதியில் சீன வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருள் தரப்பட்டுள்ளது என்கிறார். வி-------நேயர்ரின் தொகுப்பு முயற்சியை பாராட்டுகிறோம். ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் நன்றி. ரா-------பாடங்கள் சொலிலிக் கொடுப்பது மட்டுமல்லாமல், சில நல்ல ஆலோசனைகளை வழங்குவதன் மூலம், தமிழ் மூல சீனம் நிகழ்ச்சியைக் கேட்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்று பாராட்டியுள்ளார். புதுவை நேயர் என் பாலகுமார் மேலும் மதுரை கைத்தறி நகர் நேயர் ஜே டி ஆனந்தன் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை வாரத்திற்கு 3 முறைாயாகக் குறைத்து நேயர் நேரம் நிகழ்ச்சியை வாரத்திற்கு இரண்டுமுறையாக அதிகரிக்கலாமே என்று யோசனை கூறியுள்ளார். வி------பாராட்டுக்களுக்கும் யோசனைக்கும் நன்றி, யோசனையை கவனத்தில் கொள்கிறோம். சரி அடுத்த கடிதம். ரா--------அமெரிக்காவில் இருந்து ஆஸ்மர்ட் அனுப்பிய மின்னஞ்சல். சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு குறித்த செய்திகளை தங்களஇன் வலைத்தளப் பக்கம் மூலம் மிக நன்றாக வாசிக்க முடிகிறது. தமிழ் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் சென்னை உட்பட எந்த வானொலி நிலையமும் செய்ய முன்வராத சேவையை நீங்கள் சீனாவில் செய்கிறீர்கள், சீன உணவரங்கம் போன்ற செய்திகள் பால்பாயாசத்தில் ஏலக்காய் தூவியது போல மணக்கிறது. ரியல் ஆடியோவில் பிற செய்திகளை கேட்க முடிந்த என்னால் தங்களின் நிகழ்ச்சிகளை கேட்க என்னால் இயலவில்லை. நெட் ஒர்க் பிராப்ளம் என்று வருகிறது. வின்டோஸ் மீடியா பிளேயரின் இந்தபிரச்சினை இல்லை. வி-------பாராட்டுக்கு நன்றி. தற்போது உலகில் பல வானொலி நிலையங்கள் தங்களுக்கென தனியாக வலைதளங்களை உருவாக்கியுள்ளன. சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை ரியல் ஆடியோவில் கேட்கலாம்.