• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-29 14:41:44    
மின்னஞ்சல்

cri
பல நேயர்கள் கேட்டு உடனே மின்னஞ்சல் செய்கிறார்கள். ரா-------சீன வானொலி இணையம் பற்றி வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். படிக்கட்டுமா. வி--------படியுங்கள். ரா------சீன வானொலி இணையத்தை நாள்தோறும் நான் பார்வையிடுகிறேன். ஓர் இளம்பெண்ணைப் போல சீன வானொலி தமிழ் பிரிவின் இணையம் நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டும். செழுமையாகியும் வருகிறது. இந்த இணையத்தை அடிக்கடிப் பார்வையிடாத நேயர்கள் கொடுத்து வைக்காத நேயர்கள் தான். காதால் வானொலியின் கேட்கும் கட்டுரைகள் அனைத்தும் பொருத்தமான தேவையான நிழற்படங்களுடன் இணையத்தில் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இணையத்தின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டு கூற விரும்புகின்றேன். கடந்த வாரம் பெய்சிங் வாழ் தமிழர்கள் இணைந்து தமிழர் குழு ஒன்றை ஏற்படுத்தியதைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நமது வானொலியில் ஒலிபரப்பானது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் வெகு அழகான முறையில் இணையத்தில் கட்டுரையுடன் வைக்கப்பட்டுள்ளன. அதை நாள் கண்டு மகிழ்ந்தேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்றை மட்டுமே நான் சுட்டிக் காட்டுகிறேன். மற்ற கட்டுரைகளையும் நேயர்கள் இணையத்தில் பார்த்தால் அவர்கள் பரவசமாவது உறுதி. சில பிரச்சினைகளும் இணையத்தில் தெரிவிப்பேன், சரியா. வி-----------பாராட்டுக்கு நன்றி செல்வம் அவர்களே. நீங்கள் குறிப்பிட்டது போன்ற பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம். சரி அடுத்து, ரா--------மதுரை செல்லூர் நேயர் என் சீனிவாசன் பெய்ச்சிங் மாநகரில் தமிழர் குழு ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடியது பற்றி சிறப்பு நிகழ்ச்சி கேட்டு மகிழல்ந்தோம். நிகழ்ச்சியை தொகுத்த ராஜாராம் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலையரசிக்கும் நன்றி என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். வி---------அந்த புத்தாண்டுக் கொண்டிட்டத்தில் சீன வானொலி முன்னால் இயக்குநர் பேராசிரியர் சுந்தரம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துக் கொண்டார். பாராட்டுக்கு நன்றி. ரா---------வேலூர் மாவட்டம் ராமபாளையம் நேயர் முனுகப்பட்டு கண்ணன் சேகர் கடந்த பிப்ரவரி திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டியுள்ளார். குறிப்பாக சீன விளையாட்டு வீரர்கள் விருப்பம் என்ற செய்தி தொகுப்பினை கேட்டேன். பெய்சிங் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் கால அளவு குறைந்து வரும் இந்தச் சூழலில் சீன வீரர்கள் சாதனை புரிவதற்கான பயிற்சிப் பற்றி கூறக் கேட்டேன். 2008ம் ஆண்டின் போட்டியில் சீன வீரர்கள் சாதனை புரிய வேண்டும் என தேசிய விளையாட்டுத் துரை தலைவர் பாராட்டு தெரிவித்தது அருமை.