• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-28 09:26:39    
மின்னணுப் பேருந்து நிறுத்தம்

cri
அடிக்கடி பேருந்தில் பயணம் செய்யும் நண்பர்களுக்கு பின் வரும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதாவது நீண்ட நேரம் பேருந்துக்காகக் காத்திருந்தும் பேருந்து வரவில்லை என்ற காரணத்தால் வாடகை காரில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. வாடகை காரில் ஏறியதும் பேருந்து வந்து நிற்கும். பாவம். பேருந்துக்காகக் காத்திருப்போர் பேருந்து வலும் நேரத்தைச் சரியாக அறிந்து கொள்ள முடியாமையே இதற்கு காரணம்.

இன்றோ பெய்ஜிங் மாநகரின் கிழக்கு பகுதியில் 420 வழித்தட எண பேருந்தில் பயணம் செய்வோருக்கு இந்தக் கவலை கிடையாது. ஏனெனில் பெய்ஜிங்கில் முதல்முதலாக மின்னணு கருவி பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் பேருந்து நிறுத்தில் உள்ள பலகையைப் பார்த்து அடுத்த பேருந்து வரும் நேரத்தை அறிந்து கொல்ளலாம். இந்த மின்னணு அமைப்பில் வேறு சில செயல்திறநும் உண்டு. இப்போது இது பற்றி பார்ப்போம்.

சுருக்கமாக கூறின் மின்னணு பேருந்து அமைப்பில் 3 பிரிவுகள் இடம் பெறுகின்றன. முதலாவது பிரிவு பேருந்தில் பொருத்தப்பட்ட மின்னணு கருவியாகும். அது ஆப்பிள் அளவில் உள்ளது. பேருந்துகள் போய் வருவது பற்றிய தகவல்களை அது முக்கியமாக சேகரிக்கின்றது. பின் வானொலி இணையத்தின் மூலம் அனுப்பப்படுகின்றது. அமைப்பின் இரண்டாவது பிரிவு பேருந்து ஆணையத்தின் தகவல் மையத்தில் உருவாக்கப்படுகின்றது. அது பேருந்திலுள்ள மின்னணு கருவி மூலம் அனுப்பப்பட்ட தகவல்களை ஏற்றுக் கொண்டு பின் கணிணி மூலம் பேரும்து அடையும் நேரத்தை மூன்றாவது பிரிவு அதாவது அதன் மையப் பகுதியான பேருந்து நிறுத்த நிலையத்துக்கு அனுப்புகின்றது.

தற்போது இலக்கம் 420 எனும் பேருந்து போகும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் மின்னணு தூண் பொருத்தப்படுகின்றது. அது 3 மீட்டர் உயரடையது. அதற்கு மூன்று முகப்புகள் உண்டு. ஒவ்வொரு முகப்பிலும் மின்னணு திரை ஒன்று உண்டு. இவை மோட்டார் வாகனங்கள் போகும் பாதை மிதி வண்டிகள் போகும் பாதை, பேருந்து நிறுத்த நிலையம் ஆகியவற்றை நோக்கி அமைந்துள்ளன.

இந்த மின்னணு பேருந்து நிறுத்தத்தின் ஆராய்ச்சிப் பணியில் பங்கு கொண்ட பெய்ஜிங் மாநகரின் ஒரு நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுனர் செங் வென் லொங் கூறியதாவது"பேருந்து நிலையத்தை நோக்கிய இந்த திரை மூலம் பயணிகளுக்கு பேருந்து இயக்கம் பற்றிய தகவல்களை வெளியிலாம். பேருந்து எந்த நிறுத்தத்தை அடைந்துள்ளது. இந்த நிலையத்துக்கு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்என்பனவற்றை பயணிகளுக்கு அது திரை மூலம் அறிவிக்கின்றது "என்றார் அவர்.

தவிர இந்த மின்னணு பேருந்து நிறுத்தத்திற்கு மேலும் பல செயல் சிறன்களும் உண்டு. எடுத்துக்காட்டாக பேருந்து நிறுத்ததில் உள்ள மின்னணு திரையில் பேரம் பார்க்கலாம். இது அங்கு போய் வரும் ஓட்டுநர்களுக்கு வசதியாக உள்ளது. மிதி வண்டிகளை நோக்கும் திரையில் முக்கியமான செய்திகள் அரசு அறிக்கைகள் வானிலை முன்னறிவிப்பு போக்குவரத்து நிலைமை உள்ளிட்ட பல செய்திகள் காண்பிக்கப்படுகின்றன. வானிலை முன்னறிவிப்பு அல்லது முக்கியமான சாலை விபத்துக்கள் தொற்று நோய்கள் உள்ளிட்ட திடீர் நிகழ்ச்சிகள் நிகழும் போது மின்னணு திரையில் அது தொடர்பான தகவல்களை விரைவில் காட்ட முடியும். இரவு கூட இந்தத் தகவல்கள் மிகவும் தெளிவாக தெரிகின்றன.

திரு சியாங் அடிக்கடி இலக்கம் 420 எண் பேருந்தில் செல்வார். திரையில் காட்டப்படும் தகவல் மிகவும் பயனுடையது என்று அவர் கருதுகினஅறார். அவர் கூறியதாவுத"நேரம், வானிலை முன்னறிவிப்பு முதலியவற்றை இதிதரையில் காணலாம். மிகவும் வசதியாக உள்ளது. ஒரு முறை பிற்பகல் மழை உண்டு என்ற வானிலை முன்னறிவிப்பைக் கண்ட உடநே வீாட்டுக்குப் போய் வெளியில் காயவைத்த ஆடைகளை அறைக்கு எடுத்து வைத்தேன்"என்றார் அவர்.

தவிர மின்னணு பேருந்து நிறுத்தத்தில் பொருத்தப்பட்ட இவ்மைப்பின் உச்சியில் 270 திகிரி சுழலக் கூடிய படம் எடுப்பு கருவி உண்டு. பேருந்து ஆணஐயத்தின் நிர்வாகிகள் இதன் மூலம் போக்குவரத்து நிலைமையைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையையும் தெரிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில் பேருந்துகளின் இயக்கத்தை உரிய முறையில் சரிப்படுத்த முடியும்.

மின்னணு பேருந்து நிறுத்தத்தின் செயல் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு சீன அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பெய்ஜிங்கில் ஒரு பேருந்து வழித் தடத்தி இத்தகைய மின்னணு பேருந்து நிறுத்தம் பயன்பாட்டுக்கு வந்த போதிலும் மா நகர் முழுவதும் பேருந்து போக்குவரத்து சேவையை உயர்த்தும் வகையில் பெய்ஜிங் மாநகராட்சி பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் விளைவாக 2008 ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிக்கு முன் அனைத்து பேருந்து வழித் தடங்களிலும் இத்தகைய வசதிகளை பொருத்த முடியும். பெய்ஜிங் தவிர சீனாவின் மற்றொரு பெரிய நகரான ஷாங்காயில் நின்னணு பேருந்து நிறுத்தங்கள் சோதனை முறையில் நடைமுறைக்கு வர துவங்கியுள்ளன.

நேயர்களே மின்னணு பேருந்து நிறுத்தம் பற்றி இது வரை அறிமுகப்படுத்தினோம். மிக்க நன்றி. இத்துடன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.