• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-29 09:25:16    
தமிழ் மூலம் சீனம் பாடம் 26

cri
கடந்த முறை நாங்கள் நான்கு உரையாடல்களை மீண்டும் பார்த்துள்ளோம். ஒரு புதிய உரையாடலை படித்துள்ளோம். பாடத்துக்குப் பின் நீங்கள் பயிற்சி செய்தீர்களா. மனதில் பதிந்திருக்கிறதா?

முதலில் கடந்த முறை நாம் படித்த புதிய உரையாடலை மீண்டும் பார்ப்போம்.

太感谢了!

没什么!

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை தருகின்றோம்.

太感谢了!

மிக மிக நன்றி, அல்லது மிகவும் நன்றி.

没什么!

பரவாயில்லை, நன்றி சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. என்று பொருள். ஆங்கிலத்தில் IT IS NOTHING.

இப்பொழுது நேயர்கள் இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

太感谢了!

没什么!

太 என்றால் அளவைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். மிகவும், அல்லது மிக,மிக என்று பொருள். 感谢 என்றால் நன்றி என்று பொருள், 谢谢 என்றும் சொல்லலாம். 感谢,谢谢, ஒரே பொருள்.

没什么 என்ற வாக்கியத்திலுள்ள 没 என்ற சொல்லுக்கு இல்லை என்பது பொருள். 什么 என்றால் ஒன்றும் அல்லது எதுவும் என்று பொருள். ஆனால் முன்பு நாம் படித்த, 您叫什么名字 என்ற வாக்கியத்திலுள்ள 什么 என்ற சொல்லுக்கு என்ன என்று பொருள் தான். ஒரே சொல், ஆனால் வேறுபட்ட இடங்களில் பொருள் வித்தியாசம்.

இப்பொழுது ஒரு புதிய உரையாடலை படிக்கின்றோம். தமிழ் மக்களிடையில் ஒருவர் தவறு செய்தால், அல்லது எதை செய்யத் தவறினால், அவர் பொதுவாக மன்னித்துக் கொள்ளுங்கள், அல்லது மனிக்கவும் என்று சொல்ல வேண்டும் அல்லவா.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஏதோ ஒரு விஷயம் மறந்துவிட்டீர்கள் என்றால், மன்னிக்கவும் நான் மறந்துவிட்டேன் என்று சொல்ல வேண்டும். எதிர் தரப்பினர், பொதுவாக பரவாயில்லை என்று பதிலளிப்பார்.

சீன மொழியிலும் இப்படி தான். இப்பொழுது நேயர்கள் கவனமாக கேளுங்கள்.

对不起, 我忘了!

没关系!

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தைக் கேளுங்கள்.

对不起!我忘了!

மன்னித்துக் கொள்ளுங்கள், நான் மறந்துவிட்டேன்.

没关系!

பரவாயில்லை.

இங்கு 对不起 என்றால், மன்னித்துக் கொள்ளுங்கள் என்பது பொருள், 我忘了,என்ற வாக்கியத்திலுள்ள 忘 என்றால் மறப்பது என்று பொருள். 了என்றால் ஒரு செயல்பாடு நிறைவடைவதைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். பொதுவாக ஒரு வினைச்சொல்லுக்குப் பின் வரும். தமிழ் மொழியில் மறந்துவிட்டேன், சாப்பிட்டுவிட்டேன் என்ற வாக்கியங்களிலுள்ள "விட்டேன்" போல.

இப்பொழது இந்த உரையாடலை நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

对不起,我忘了!

没关系!

நேயர்களே, இன்று ஒரு புதிய உரையாடலை படித்துள்ளோம். இதை தமிழ் மூலம் சீனம் என்று நூலின் 18வது பக்கத்தில் நீங்கள் கண்டுபிடிக்கலாம். மூன்றாம் பாடத்தின் 道歉 (டௌ ச்சியன்)என்ற பகுதியில் சேர்ந்தது. பாடத்துக்குப் பின், குடும்பத்தினருடன் அல்லது நண்பருடன் பயிற்சி செய்யுங்கள். இத்துடன் உங்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுகின்றோம். 谢谢, 再见!