• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-30 08:21:11    
கொடி ஏற்றம்

cri
மரணமடைந்த குறிப்பிட்ட சில தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐ.நா கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் செய்தியை அடிக்கடி செய்தி தாள்களில் கண்டறிகின்றேன். கொடி ஏற்றுவது இறக்குவது பற்றி ஐ.நா ஏதாவது விதி வகுத்துள்ளதா என்று சீனாவின் ஹூநான் மாநிலத்தில் வாழ்கின்ற வாசகர் வுவாங் பன் கேட்கின்றார்.

இது பற்றி இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் இணையத்தில் பதிலளிக்கின்றோம். பதிலளிப்பவர் தி. கலையரசி

நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தின் முன்னாள் வரிசையாக 191 உறுப்பு நாடுகளின் தேசியக் கொடிகள் பறக்கின்றன. ஐ.நாவில் சுற்று பயணம் மேற்கொள்கின்ற பயணிகள் இந்த தேசிய கொடிகளை பின்னணியாக பயன்படுத்தி நிழற்படம் எடுக்க விரும்புகின்றனர். சூரிய ஒளியுடன் மித காற்று வீசும் நாட்களில் இந்த பல வண்ணக் கொடிகள் மக்களின் பார்வையை ஈர்த்துள்ளன. தவிரவும் கட்டிடத்தின் முன் வளாகத்திலும் வடக்கிலுள்ள பின் பூங்காவிலும் தனியாக மேலும் உயரமான கொடி கம்பங்கள் நிற்கின்றன. ஆகாய நீலத்தில் ஐ.நா கொடிகள் பறக்கின்றன. இந்த கொடிகள் ஐ.நா காவல்துறையினர்களால் பாதுகாக்கப்படுகின்றன. அவர்களால் கொடி ஏற்றப்பட்டு இறக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் ஐ.நா கொடி ஏற்றப்படுகின்றது. சனி ஞாயிற்று கிழமைகளிலும் ஒழுங்காக நடைபெறுகின்றது. எனினும் உறுப்பு நாடுகளின் தேசிய கொடிகள் ஐ.நா அலுவல் நாட்களில் காலை 8 மணிக்கு ஏற்றப்பட்டு மாலை 4 மணிக்கு இறக்கப்படுகிறது. 21ம் நூற்றாண்டில் நுழைந்துவிட்ட போதிலும் ஐ.நா கொடியை ஏற்றும் முறை இன்னும் செயற்கை முறையாக உள்ளது. பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்கனவே கம்பத்தில் கட்டிய வண்ணம் இருக்கின்றன. கொடி ஏற்றும் போது பத்துக்கும் அதிகமான ஐ.நா காவற்துறையினர்கள் ஒரே வரிசையில் நின்ற வண்ணம் ஒரு நேரத்தில் கம்பத்தின் கீழ் இடத்தில் உள்ள இருப்பு பெட்டியை திறத்து உள்ளேயுள்ள கயிற்றை பிடித்து நீக்கினால் ஒரு நிமிடத்துக்குள் கொடி உச்சிக்கு உயர்ந்து பறக்க்த் தொடங்கும்.

உறுப்பு நாடுகளின் கொடிகள் ஆங்கில சொற்களின் அகர வரிசைப் படி நிற்கின்றன. முதலாவது நாடு ஆப்கானிஸ்தான். கடைசி நாடு சிம்பாபுவே. பல்வேறு நாடுகள் முற்றிலும் சம நிலையில் உள்ளன. எந்த நாடும் தாம் வகிக்கின்ற இடத்தை தெரிவு செய்ய கூடாது. எதிரெதிர் நிலையிலுள்ள நாடுகளும் அகரவரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக அவற்றின் தேசிய கொடிகள் ஒரே வரிசையில் தான் பறக்கவிடப்படும். ஒவ்வொரு புதிய உறுப்பு நாட்டை ஐ.நா ஏற்றுக் கொள்ளும் போது தேசிய கொடி ஏற்றும் விழா நடத்தப்படும். தேசிய கொடி ஆங்கில அகர வரிசையில் சேர்க்கப்படும்.

கொடியின் பயன்பாடு பற்றி ஐ. நா தெளிவான விதியை வகுத்துள்ளது. அதாவது ஐ நாவின் கொடிகளை வணிக விளம்பரமாக பயன்படுத்தக் கூடாது. பல்வகை கூட்டங்கள் நடைபெறும் போது தலைமை செயலாளர் இதில் கலந்து கொள்ளும் போது தான் ஐ.நா கொடி தொங்கவிடப்ப்படும். ஐ.நா கொடி மற்றும் உறுப்பு நாடுகளின் கொடிகள் ஒரே நேரத்தில் தொங்கிவிடப்படும் போது அவற்றின் அளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். பல உறுப்பு நாடுகளின் தேசிய கொடிகளுடன் ஐ.நா கொடி தொங்கவிடப்படும் போது அவற்றின் நடுவில் வைக்கப்பட வேண்டும். உறுப்பு நாடுகளின் நடப்பு அரசு தலைவர்கள் அரசாங்க அதிபர்கள் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதிகள் ஆகியோர் மரணமடைந்தால் ஐ.நா அரை கம்பத்தில் அந்நாட்டு தேசிய கொடி பறக்கவிடும்.