• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-30 08:27:05    
எலும்புப் புற்று நோய்க்குச் சிகிச்சை

cri
கலை.......எலும்புப் புற்று நோய்க்குச் சிகிச்சை என்ன?

ராஜா.......புற்று நோயின் தன்மை, அது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொருத்து சிகிச்சை அமையும். மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன. கெமோதொரப்பி மருந்து கொடுப்பது, ரேடியோதெரபி கரிதியக்கச் சிகிச்சை மூலம் புற்று செல்களை அழிப்பது ஆகியவை முதல் கட்ட சிகிச்சைகள். மூன்றாவதாக அறுவைச் சிகிச்சை. அறுவைச் சிகிச்சை மூலம் புற்றுநோய் பரவியுள்ள இடத்தை முற்றிலுமாக அகற்றிவிடுவது.

கலை.......அறுவைச் சிகிச்சையின் பங்கு என்ன?

ராஜா......புற்று நோயால் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு பொருத்த வேண்டியது அவசியம். இல்லையெனில் நோயாளி இயல்பாக நடமாட முடியாமல் அல்லது செயல்பட முடியாமல் ஊனமாக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியை அகற்றிவிட்டு செயற்கை உறுப்பு அல்லது போன் சிமென்ட் அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட எலும்பைப் பொருத்தி சரி செய்யலாம். இது போன்று மாற்று எலும்பு பொருத்துவதால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்திவிட முடியாது. நோயால் துன்பப்படாமல் வாழ வழி செய்யலாம்.

கலை......செலவு அதிகம் ஆகுமா?

ராஜா.....டைட்டானியம். அலாய் மற்றும் ஸ்டெயின்லஸ் போன்ற உலோகங்கள் மூலம் செயற்கை எலும்புகள் செய்யப்படுகின்றன. இதை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்தால் விலை அதிகம். வெளிநாடுகளிலிருந்து வாங்கி அறுவைச் சிகிச்சை செய்தால் இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் வரை செலவாகும்.

இதைக் கருத்தில் கொண்டு உள்நாட்டிலேயே இந்த செயற்கை எலும்பைச் தயாரிக்க இந்திய மருத்துவர்கள் முயற்சி எடுத்து பல ஆண்டு ஆய்வுக்குப் பின் வெற்றி கண்டுள்ளனர். இந்த முறையில் இதுவரை 970 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செய்யப்படும் செயற்கை எலும்புகளின் விலை ரூ 35 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரைதான். இதனால் நடுத்தர ஏழை மக்களும் பலன் அடையமுடியும்.

கலை......பொருத்த முடியுமா?

ராஜா.......தாராளமாகப் பொருத்த முடியும். இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில் எலும்பைத் தானம் கொடுக்க முன் கூட்டியே விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் எலும்பு தானம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகின்றது.

கலை......எலும்பு வங்கி என்றால் என்ன?

ராஜா.....இறந்தவர்களிடமிருந்து 6 மணி நேரத்துக்குள் எலும்பை எடுத்து அதை மைனஸ் 18 டிகிரி சென்டிகிரேடில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் 2 ஆண்டுகள் வரை அந்த எலும்பை மற்றவர்களுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஹெப்படிட்டிஸ், பி.சி. மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்பை எடுக்கக் கூடாது.

கலை.......இந்தியாவில் எங்கெங்கெல்லாம் எலும்பு வங்கி உள்ளது?

ராஜா......இந்தியாவில் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் முதல் முறையாக எலும்பு வங்கி தொடங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது விரைவில் தொடங்கப்படும். மும்பையில் திசு வங்கி உள்ளது. அதில் சிறிய எலும்புகளைச் சேமித்து வைத்துள்ளனர். ஆனால் முதல் முறையாக இந்தியாவில் சென்னையில் தான் எலும்பு வங்கி தொடங்கப்படுகின்றது.