• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-30 10:05:12    
ஐரோப்பிய மகளிர் கால்பந்து போட்டி

cri

ஜுன் திங்கள் 19ஆம் நாள் நடைபெற்ற 2005 ஐரோப்பிய மகளிர் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் ஜெர்மன் தேசிய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் அது 3-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியைத் தோற்கடித்தது. ஐரோப்பிய மகளிர் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் ஜெர்மன் அணி சாம்பியன் பட்டம் பெறுவது இது 6வது முறை.

சர்வதேச விளையாட்டு ஆண்டு 2005ஆம் ஆண்டை சர்வதேச விளையாட்டு ஆண்டு என ஐ.நா அறிவித்திருப்பதைக் கொண்டாடும் பொருட்டு, ஜுன் திங்கள் 19ஆம் நாள் சீனாவின் 17 நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருகளில் நடந்து செல்லும் மிக எளிதான முறையில் சீன மக்களிடம், உடல்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தனர்.

கோல்ஃப் ஜுன் திங்கள் 19ஆம் நாள் அமெரிக்க கோல்ஃப் ஒப்பன் போட்டி நிறைவடைந்தது. கடைசி நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் கம்பேல், சாம்பியன் பட்டத்தை நிலைநாட்ட முயன்ற அமெரிக்க வரர் கூசனைத் தாண்டி முதலிடம் வென்றார். அமெரிக்க கோல்ஃப் ஒப்பன் போட்டியின் வரலாற்றில் நியூசிலாந்து வீரர் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.

ஜுன் திங்கள் 30ஆம் நாள் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனம் கோப்பைக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் பிரேசில் அணி 4-1 என்று கோல் கணக்கில் எதிர்பாராதவாறு ஆர்ஜேடின் அணியைத் தோற்கடித்து இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

கார் ஓட்டப் போட்டி ஜுன் திங்கள் 19ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற 2005 உலக F-1 கார் ஓட்ட சாம்பியன் பட்டப் போட்யில் வரலாற்றில் மிகவும் வேடிக்கையான ஒரு நிலைமை தோன்றியது. டயர் விநியோகிக்கும் மிச்சிலின் கம்பெனி, இந்த போட்டி நடைபெறும் சாலையில் கார்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர இயலாத நிலையில் உள்ளது. டயர் மாற்ற இந்த கம்பெனியை சர்வதேச கார் ஓட்ட சம்மேளனம் அனுமதிக்காததால், இந்த வகை டயரை பயன்படுத்தும் 7 அணிகள் இப்போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இதன் விளைவாக, 3 அணிகளைச் சேர்ந்த 6 கார்கள் மட்டும் இப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதியில் ஃபராரி அணியைச் சேர்ந்த ஜெர்மன் வீரர் MICHAEL SCHUMACHER முதலிடம் பெற்றார்.