• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-01 15:42:26    
பப்பாளியும் முட்டையும்

cri

இன்று, பப்பாளிப் பழமும், முட்டையும் கலந்த தின்பண்டத்தை அறிமுகப்படுத்துகிறேன். கோடைகாலத்தில், பழங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கும் தின்பண்டம் உண்பது, உடல் நலனுக்கு நல்ல இருக்கிறது.

பப்பாளிப்பழம், வெப்ப மண்டலத்தின் பழமாகும். இந்தியாவில் தாராளமாக கிடைக்கிறது. பப்பாளிப்பழத்திலுள்ள விட்டமின் சி, அப்பிளில் இருப்பதை விட 48 மடங்கு அதிகம் ஆகும். சத்து மிக்க பழம் இது.

பப்பாளிப் பழம், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று, சீனாவின் பண்டைகால மருத்துவ இதழ் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவில், பழங்களைப் பயன்படுத்தி, தின்பண்டம் தயாரிப்பது, மேலும் பிரபலமாகியுள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்படும் பப்பாளியும் முட்டையும் என்ற தின்பண்டத்தின் தயாரிப்பு முறை மிகவும் எளிதானது.

அது தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்:

பப்பாளி பழம் ஒன்று

முட்டை இரண்டு

பால் 500 கிராம்

சிறிது சர்க்கரை.

தயாரிப்பு முறை:

முதலில், பப்பாளி பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கி, பெரிய கிண்ணத்தில் வைக்கவும். முட்டையில் சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்க வேண்டும். அடுத்து, முட்டை, சர்க்கரை கலவையை விட, 4 மடங்கு அதிகமான பால், லேசாக சூடாக்கி, முட்டையில் சேர்க்கப்பட வேண்டும். இது, முன்கூட்டி செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி.

அடுத்து, பப்பாளி துண்டுகளையும் முட்டையையும் பாலும் கலந்த திரவத்தில் போடணும்。

பப்பாளி துண்டுகளைப் போட்டு வைத்துள்ள கிண்ணத்தில் பாலும் முட்டையும் கலந்த திரவத்தை ஊற்ற வேண்டும். அப்புறம், அந்த கிண்ணத்தை வாணலியில் நீர் விட்டு, 10 நிமிடம் நீராவியில் வேகவிட வேண்டும். சுவையான இந்த தின்பண்டம், தற்போதைய சீன இளைஞர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பப்பாளியும் முட்டையும் கலந்த நிறத்துடன் இந்த தின்பண்டம், கண்டிப்பாக சுவையாக இருக்கும் என நம்புகின்றேன். குளிர்ப்பதனப்பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்த பிறகு, இது மேலும் சுவையாக இருக்கும். அப்படித்தானே.

கோடைகாலத்தில் குளிரான பப்பாளி-முட்டை வறுவல் தின்பதை, எமது நேயர்களுக்கு பிடிக்கும் என்று, நம்புகின்றேன்.

அடுத்த முறை, ஆப்பிளும் icecream மும் என்ற இனிப்பை செய்யலாம்.

ஆப்பிள், icecream, கொஞ்சம் வெண்ணெய், வெல்லம், பட்டை, ஜாதிக்காய் முதலியவற்றை முன்கூட்டியே எடுத்துவைத்திருங்கள்.