• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-05 08:28:55    
சாம்பியன் பட்டம் பெற்ற சீன மகளிர் கூடைப் பந்து அணி

cri

2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முழக்கம், ஓர் உலகம் ஒரு கனவு என்பதாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் கமிட்டி ஜுன் திங்கள் 26ஆம் நாள் இதை அறிவித்தது. ஐக்கியம், நட்பு, முன்னேற்றம் என்ற ஒலிம்பிக்கின் எழுச்சியை இந்த முழக்கம் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளது. மொழி, இனம், பண்பாடு ஆகிய துறைகளில் உலக மக்களிடையே வித்தியாசம் நிலவிய போதிலும், ஒரே உலகில் வாழும் மக்களுக்கு, சமாதானம் மற்றும் வளத்துக்காக பாடுபடும் ஒரே கனவு உண்டு என்பது இந்த முழக்கம் எடுத்துக்காட்டுகிறது.

ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன் பட்ட போட்டி ஜுன் திங்கள் 26ஆம் நாள் சீனாவின் ச்சின் ஹுவாங்தௌ நகரில் நிறைவடைந்தது. அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சீன அணி 73-67 என்று புள்ளிக் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்து மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. தென் கொரிய அணி இரண்டாம் இடத்தையும் சீனத் தைபெய் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

2005 ஆம் ஆண்டு சர்வதேச நீர் குதிப்பு போட்டியின் இறுதிப் போட்டி ஜுன் திங்கள் 26ஆம் நாள் மெக்சிகோ நகரில் நிறைவடைந்தது. சீன வீரர்கள் இப்போட்டியில் மிகவும் சிறந்த முறையில் குதித்தனர். மொத்தம் 8 தங்கப் பதக்கங்களில் 6 தங்கப் பதக்கங்களை வென்றனர்.

2005 உலக மகளிர் வாலிபால் போட்டியின் நிங்போ சுற்று சீனாவின் நிங்போ நகரில் நிறைவடைந்தது. சீன மகளிர் அணி அன்று நடைபெற்ற கடைசி சுற்று ஆட்டத்தில், 3-0 என்ற செட் கணக்கில் அமெரிக்க அணியைத் தோற்கடித்து, மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, இந்த சுற்றுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. அமெரிக்கா, நெதர்லாந்து, தைலாந்து சீனா ஆகிய நாடுகளின் அணிகள் இந்த சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டன.

2006ஆம் ஆண்டு உலக ஆடவர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டியின் ஆசியப் பிரதேசத்து தேர்வு போட்டியின் E பிரிவு போட்டி ஜுன் திங்கள் 26ஆம் நாள் நிறைவடைந்தது. சீன ஆடவர் அணி இப்பிரிவின் கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற செட் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்து, மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதனால், அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள உலக ஆடவர் வாலிபால் போட்டியில் கலந்துகொள்ள சீன அணி தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, இந்தோனேசியா, தைலாந்து ஆகிய இரண்டு அணிகளை சீன அணி தோற்கடித்தது.