• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-07 06:43:16    
உலக மகளிர் வாலிபால் பரிசுப் போட்டி

cri

சர்வதேச சம்மேளன கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் ஜுன் திங்கள் 26ஆம் நாள் நிறைவடைந்தது. ஆர்ஜேன்டின அணிக்கும் மெக்சிகோ அணிக்குமிடையில் நடைபெற்ற 120 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு, போட்டியை சமன் செய்தன. இறுதியில் பெனால்டி கோல் மூலம் ஆர்ஜேன்டின அணி 7-6 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியைத் தோற்கடித்து, இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது. ஜுன் திங்கள் 30ஆம் நாள் ஜெர்மனியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 4-1 என்று கோல் கணக்கில் எதிர்பாராத முறையில் ஆர்ஜேன்டினா அணியைத் தோற்கடித்து இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

ஜுலை திங்கள் 2ஆம் நாள் பிரிட்டனில் நடைபெற்ற வின்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான இறுதிப் போட்டியில் விலியம்ஸ் தாவின்போட்டைத் தோற்கடித்து தொடர்ந்து மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். 2000, 2001 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார்.

உலகில் மகளிர் கால்பந்து அணிகளின் வரிசைப் பட்டியலில் சீன மகளிர் அணி 8ஆம் இடம் வகிக்கின்றது. கடந்த முறையைவிட இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது. அண்மையில் ஐரோப்பிய சாம்பியன் பட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஜெர்மன் அணி அமெரிக்க அணியைத் தாண்டி உலகில் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது.

சீனாவின் சாங்ஷா நகரில் நடைபெற்ற சீனத் தேசிய மகளிர் தடகளச் சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீராங்கனை சாங் வென்சியூ 73.25 மீட்டர் என்ற சாதனையுடன் சம்மட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். இது அவருடைய 72.37 என்ற முந்தைய ஆசிய சாதனையை முறியடித்துள்ளது.

வாலிபால் 2005 உலக மகளிர் வாலிபால் பரிசு போட்டியின் மகௌ சுற்றில் சீன மகளிர் அணி3-0 என்ற செட் கணக்கில் ஐரோப்பிய வலுவான அணியான போலந்து அணியைத் தோற்கடித்தது. இவ்வாறு சீன தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் நுழைவது உறுதியாயிற்று.

முன்னதாக நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற செட் கணக்கில் ஜெர்மன் அணியைத் தோற்கடித்தது. இந்த சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீன அணியும் பிரேசில் அணியும் மோதும். சுவீட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் பிரேசில் அணி சீன அணியைத் தோற்கடித்திருந்தது. எனவே இந்த முறை இரு அணிகளும் மீண்டும் மோதுவதில் யார் வெற்றி இன்னும் நிச்சியித்துச் சொல்ல முடியாது.