 ஆப்பிரிக்காவில் மொம்பாசா அருங்காட்சியகத்தில் பணி புரிகின்ற இரண்டு சீன பெண்களை சந்திக்க சீன செய்தியாளர் ஒருவர் அங்கே சென்றிருந்தார்.
வாசினா என்பதற்கு ஸ்வாஹிலி மொழியில் சீனர் என்று பொருளாகும். கடுமையான வெயில், சில பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தின் முன்னால் உள்ள மர நிழலில் தாராளமாக ஐஸ் கிரீம் சாப்பிடுகின்றனர். செய்தியாளர் சீன பெண்மணிகளை சந்திக்க அவசரமாக அருங்காட்சியகதிற்குள் நுழைந்தார். அப்போது மத்தியயாந சாப்பாட்டு நேரம். சற்று நேரத்தில் கருப்பு ஆடை அணிந்த இளம் பெண் ஒருத்தி அருங்காட்சியகத்தின் சிறிய கடையை திறந்து வைத்தார். அவர் விருந்தோம்பல் பன்பைக் காட்டினார். தாமாகவே சிற்றுண்டியை செய்தியாளருக்கு தந்தார். சீனாவிலிருந்து வந்த செய்தியை அறிந்த பின் சீனாவில் இது போன்ற உணவு உண்டா என்று சிரிப்புடன் விசாரித்தார். பின் சி தி தட்டுகளை எடுத்து காட்டி "வணக்கம்"எனும் ஆப்பிரிக்க பாடலை பாடினார். பத்தைய் தீவில் உள்ள சீனர் கதை பற்றி தெரிந்த அவர் சீனர் பாணியை தெளிவாக அறிந்திருப்பதை உரையாடல் மூலம் செய்தியாளர் அறிந்து கொண்டார். நங்கைக்கு வாய் மெந்மையானது. உடல் தோற்றம் ஒல்லியானது நன்றாக பழகிய போதிலும் நிழற்படம் எடுக்க மறுத்தார். மதம் இதற்கு காரணமாகும். நீஹ்கள் சீனர் தானே என்று செய்தியாளர் அவரை கேட்ட போது அவர் சிரிப்புடன் பேசாமல் இருந்தார்.

பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் மீண்டும் அருங்காட்சியகத்தின் வரவேற்பு அறைக்கு செந்றார். பேட்டி காண்பது பற்றி தெளிவாக சொல்லிய பின் உற்சாகமான பணியாளர் இன்னொரு வச்சினாவின் வீட்டுக்கு தொலைபேசி செய்தார். வாருங்கள் என்று வச்சினா அழைத்தார்.
வச்சினாவின் இல்லம் முன்பாசாவின் ஒடுக்கமான சந்தில் உள்ளது. இல்லத்தின் தோற்றத்தில் 35 வயதான பெண்மனி உட்கார்ந்திருந்தார். மஞ்சள் தோல் அவரை வச்சினா என்று செய்தியாளருக்கு அடையாளம் காட்டியது. மஞ்சள் நிற சிறிய பூ அச்சடிக்கப்பட்ட ஆடையை அவர் அணிந்திருந்தார். தலையில் வெள்ளை நிற பூ கைக்குட்டை கட்டியிருந்தார். ஆச்சரிய உணர்வுடன் செய்தியாளரை பார்க்கிறார். எழுந்திருந்த அவர் வணக்கம் சொல்லி செய்தியாளரை வரவேற்றார். தேனீர் கொடுத்தார். அத்துடன் இது சீன டீ என்று சிறப்பாக கூறினார்.

அவருடைய வீட்டு சாமான்கள் சீராக வைக்கப்பட்டிருந்தந. சோபாஃ, ஐஸ் பெட்டி, தொலைக் காட்சி பெட்டி, தொலை பேசி சீனாவில் தயாராந தையல் இயந்திரம், ஆகியவை செய்தியாளரின் பார்வையை ஈர்த்துள்ளன. தையல் இயந்திரத்தின் மேல் துணி போட்டு மூடப்பட்டிருந்தது. செய்தியாளர் இது பற்றி காட்டிய அக்கறையை கண்டு சிரிப்புடன் அவர் பேசினார். அடிக்கடி நானே ஆடை தைக்கின்றேன் என்று அவர் விளக்கினார். அதேவேளையில் சீன தையல் ியந்திரத்தின் தரத்தை அவர் பாராட்டினார். பல ஆண்டுகளாக பயன்படுத்திய போதிலும் இது இன்னும் புதியது போல் காணப்படுகின்றது என்றார் அவர்.
பூர்வீக ஊர் பற்றி குறிப்பிடுகையில் பத்தைய் தீவு அவருடைய பிறந்த ஊராகும். அவருடைய அம்மாவின் பூர்வீக ஊர் சீனாவில் இருந்தது. என் தோல் நிறம் அம்மாவிடம் இருந்து வந்தது. உள்ளூர் மக்களின் தோல் போல இல்லை. ஆகவே எங்கு சென்றாலும் சீனர் அல்லது வச்சினா என்று என்னை கூப்பிடுகின்றனர். எனக்கு வச்சினா என்று அம்மா பெயர் சூட்டினார்.
உங்கள் அம்மா இப்போது எங்கே இருக்கிறார் என்று கேட்ட போது சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார் என்று அவர் பதிலளித்தார். பத்தைய் தீவிலுள்ள சீனர் பற்றிய கதை கேட்டீர்களா என்று செய்தியாளர் கேட்டார். ஆமாம். முக்கியமாக தாயார் எனக்கு சொல்லி தந்தார். அவருக்கு சீன வம்சாவழி இரந்ததால் சீனா மீது அவர் தநிப்பட்ட சிறப்பு அன்பு கொண்டார். சீனாவில் தயாரான உற்பத்தி பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றார். அருங்காட்சியகத்தில் வேலை செய்கின்றேன். அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள சீன பீங்காங்பாண்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அவர். சீனா பற்றி அவர் மேலும் செய்தியாளரிடன் கேட்டார். செய்தியாளர் அவருக்கென விபரமாக பதிலளித்தார்.
பிரியாவிடை பெறும் போது, நிழற்படம் எடுக்க முடியுமா என்று கேட்டார். சற்று சிந்தித்த பின் சிரிப்புடன் மறுத்தார். என்னை பொறுத்தவரை பரவாயில்லை. என் கணவர் இதை விரும்ப மாட்டார். இது நாங்கள் பின்பற்றும் மதத்துடன் தொடர்புடையது. பெண்கள் வெளியே மற்றவருடன் பேச கூடாது. இப்போது அவர் இல்லத்தில் இல்லை. இருந்தால் அனுமதி வழங்குவார். ஏனென்றால் நீங்கள் சீனாவிலிருந்து வந்த செய்தியாளர் என்று வச்சினா சிரிப்புடன் கூறினார்.
அவசரமாக வேறு ஊருக்குச் செல்ல வேண்டும். இல்லை என்றால் செய்தியாளர் இந்த சீனரின் இல்லத்தில் மேலும் கூடுதலான நேரம் தங்கியிருக்கலாம். குறைந்தது அவருடைய கணவர் இல்லத்துக்கு திரும்பும் வரை காத்திருக்கலாம். அப்போது இந்த வச்சினாவின் நிழற்படத்தை எடுக்கலாமே. அல்லது கணவர் சீன மனைவியை பாராட்டலாமே என்று செய்தியாளர் சிந்தித்து கொண்டே வேறு ஊருக்குச் சென்றார்.
|