 81 வயதில் பட்டப்படிப்பு படித்து தேர்வு எழுதினார் ஒரு தாத்தா. அவர் பெயர் ஜியாங் சஞ்சுவான். சீனாவில் ஹியுனான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தொடக்கப்பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்து 1989-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது வாழ்நாள் கனவே பட்டதாரி ஆவதுதான். என் பேரக்குழந்தைகளுக்ுக படிப்பு என்றாலே கசப்பாக இருக்கின்றது. எந்நேரமும் டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்பதற்காக இந்த படிப்பை படித்து வருகின்றேன் என்றார்.
சமீபத்தில் அவர் தேர்வு எழுதினார்.
நான் படிப்பது என் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. படிப்பதில் உள்ள சந்தோஷத்தை அனுபவித்தால் தான் தெரியும் என்று கூறினார்.
ஸ்பிரிட் தெளிக்கப்பட்டதும் நோயாளி உடலில் தீப்பிடித்தது
அமெரிக்காவில் சியாட்டில் நகரில் ஒரு இருதய நோயாளிக்கு அவசர இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் செய்வதற்கு முன்பு ஆபரேஷன் செய்ய வேண்டிய இடத்தின் மீது தோலில் ஸ்பிரிட் ஊற்றப்பட்டது. அதன் பிறகு கத்தியை வைத்து ஆபரேஷன் செய்தபோது உடலில் தீப்பிடித்துக்கொண்டது.
ஆபரேஷன் தியேட்டர்களின் இப்படி தீப்பிடிப்பது உண்டு தான். ஆனால், அரிதாக இருக்கும் எந்று ஆஸ்பத்திரி டைரக்டிர் டாக்டர் ராப்ர்ட் கப்லான் கூறினார்.
உடலில் தீப்பிடித்த நோயாளி இறந்து போனார். உடல் கருகியதால் அவர் சாகவில்லை. இருதயம் செயல் இழந்ததால் அவர் இறந்து போனார்.
கணவருக்கு ரூ.7 லட்சம் அபராதம்
அர்ஜென்டைனாவைச் சேர்ந்த ஒருவர், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்காக கோர்ட்டில் வாழக்குத் தொடர்ந்தார். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அவர் தன் காதலியுடன் தனியாக குடித்தனம் செய்யத் தொடங்கிவிட்டார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அவர் மனைவி நஷ்ட ஈடு கோரி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கர்லோஸ் டியூபிஸ், திருமணம் சட்டப்படி ரத்தாகும் வரை தம்பிதிகள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும். விகவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதி, மன்விக்கு 7 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
|