• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-08 14:18:53    
எஸ் செல்வம் எழுத்திய கருத்துகள்

cri
சூன் திங்கள் 29-ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் திருச்சி அண்ணா நகர் திரு.வி.டி.இரவிச்சந்திரனின் உரையை விரிவாகக் கேட்டு மகிழ்ந்தேன். தான் வானொலிக்கு அறிமுகமானதையும், பழைய அனுபவம் பற்றியும் அவர் கூறினார். அப்படிக் கூறியதும் எனது நினைவுகள் சிறகடித்து பின்னோக்கிப் பறந்தது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் வானொலி கேட்டு கடிதம் எழுதுவது ஒரு சுகமான அனுபவம். உண்மையில் அப்போதைய காலம் ஒரு பொற்காலம். எங்களைப் போன்ற ஒரு சில நேயர்கள் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்திக் கொண்டு, கருத்துக்கடிதங்களை ஏராளமான அளவில் எழுதிக் குவித்தோம். ஓர் ஆண்டில் நான் இத்தனை கடிதங்கள் எழுதினேன் என்று கூறிக் கொள்வதில்தான் அப்போது உண்மையான கெளரவம். இலவசக் கடித உறைகள் இல்லாத காலக்கட்டத்தில் ஆயிரக் கணக்கில் விமர்சனக் கடிதங்களை எழுத இயல்பான ஆர்வம் இருக்க வேண்டும். அந்த இயல்பான ஆர்வம் கொண்ட நேயர்களை சீன வானொலியின் அடித்தங்கள் என்று கூறலாம். ஆனால் இப்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. இப்போதைய முன்னணி நேயர்களில் பெரும்பாலானோர் தினந்தோறும் நிகழ்ச்சிகளைக் கேட்பதில்லை. அதிகக் கடிதங்களை அனுப்ப வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் இல்லை. ஆனால் வானொலியில் மட்டும் தனது பெயர் பரபரப்பாக அடிபட வேண்டும் என்பதில்மட்டும் பலர் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் காலப்போக்கில் அன்றாடம் நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டு, ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் கருத்து தெரிவிக்கும் நேயர்கள் மட்டுமே நிலைத்து நிற்பார்கள். கடந்த 20 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து சீன வானொலிக்கு கடிதம் எழுதும் நேயர்கள் மூன்று நான்கு நேயர்கள்தான். அவர்களில் ஒருவனாக நான் இருப்பதில் பெருமை அடைகின்றேன். தொடர்ந்து அடுத்த வார நிகழ்ச்சியில் வி.டி.இரவிச்சந்திரனின் கருத்துக்களைத் தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 'சீனாவில் பெண்ணுரிமைப் பாதுகாப்புச் சட்டம்' என்ற 'செய்தித் தொகுப்பு' நிகழ்ச்சியைக் கேட்டேன். ஆணுக்குப் பெண் சமம் என்ற தத்துவத்தை வலியுறுத்தி சட்டவரைவு கொண்டுவரப்பட உள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பெண்களுக்கு இனி ண்டாட்டம்தான் அல்லவா? சீன வானொலியில் பெரும்பான்மையாக இருக்கும் அனைத்துப் பெĩ! 9;் பணியாளர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.