• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-06 11:17:39    
தமிழ் மூலம் சீனம் பாடம் 27

cri
வணக்கம் நேயர்களே, 听众们,你们好!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நான் தமிழ்ச் செல்வம்.

听众们,大家好!நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் வான்மதி.

முதலில் கடந்த மு றை நாம் படித்த, மன்னிப்பு கேட்பது பற்றிய ஒரு உரையாடலை மீண்டும் பார்ப்போம்.

对不起,我忘了!

没关系!

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தைக் கேளுங்கள்.

对不起,我忘了!

மன்னிக்கவும், நான் மறந்துவிட்டேன்.

没关系!

பரவாயில்லை.

நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்

对不起,我忘了!

没关系!

இப்பொழுது ஒரு புதிய உரையாடலை படிக்கின்றோம்.

真对不起,我来晚了。

没什么!没什么!

இந்த வாக்கியத்தின் தமிழாக்கத்தை நேயர்கள் கேளுங்கள்.

真对不起,我来晚了。

உண்மையிலே, மன்னித்துக்கொள்ளுங்கள், நான் தாமதமாக வந்தேன். தாமதத்திற்கு பொறுத்துக்கொள்க.

没什么!没什么!

சரி, பரவாயில்லை, பரவாயில்லை.

இங்கு, 真对不起,என்ற வாக்கியத்திலுள்ள 真 என்றால், உண்மையிலேயே என்பது பொருள், 我来晚了 என்ற வாக்கியத்திலுள்ள 晚 என்ற சொல்லுக்கு தாமதம் என்று பொருள். 了

என்ற சொலை கடந்த முறை ஏற்கனவே விளக்கிக் கூறினோம். ஒரு செயல்பாடு முடிவடைவதை இது குறிக்கின்றது. பொதுவாக வினைச்சொலுக்குப் பின் தான் வரும்.

இப்பொழுது இந்த உரையாடரை நேயர்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

真对不起, 我来晚了。

没什么,没什么!

நேயர்கள் இன்று மன்னிப்பு கேட்பது பற்றிய இன்னொரு உரையாடலை படித்துள்ளோம். புரிந்ததா, அதிகமாக பயற்சி செய்யுங்கள், நீங்கள் என்றோ ஒரு நாள் கவனிக்காமல் ஒரு தவறு செய்தால், அப்பா அம்மாவிடம், அல்லது ஆசிரியரிடம் மரியாதையுடன் சீன மொழியில் மன்னிப்பு கேளுங்கள். அப்போது அவர்கள் கோப்பமடையாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பர் என்று நான் நம்புகின்றேன். நான் சொன்னது சரி தானே.

நேயர்களே, இப்பொழுது முன்பு படித்த ஒரு இரையாடலை நானும் ஆசிரியரும் இயல்பான வேகத்துடன் படிக்கின்றோம். நீங்கள் கேட்டு பாருங்கள், புரிந்ததா. புரிந்தது என்றால், எங்கள் மாதிரி போல, வேகமாக பயிற்சி செய்யுங்கள்.

வான்மதி 你好!

张老师, 早上好

见到你,我很高兴!

见到您,我也很高兴。

你工作忙吗?

我很忙,您呢?

我也很忙,欢迎你来我家!

谢谢您,再见!

不客气,再见!

புரிந்ததா, குடும்பத்தினருடன் பயிற்சி செய்து பாருங்கள். புரியவில்லை என்றால் பரவாயில்லை அடுத்த முறை மீண்டும் கேட்கலாம். புரிந்தால் இந்த உரையாடலின் தமிழாக்கத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

இத்துடன் வான்மதி, தமிழ்ச் செல்வம் உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றோம். 谢谢, 再见!