• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-07 16:40:36    
யிசிங் நகரம்

cri

சீனாவின் தைய்வு என்னும் எழில்மிக்க ஏரியின் மேற்கு கரையோரத்தில், ச்சியாங்சு, செக்கியாங், அன்ஹுவெய் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் முத்து ஒன்று ஒளிவீசுகின்றது. பண்டைக்காலத்தில், யாங்சியெ என அது பெயர் பெற்றிருந்தது. சமகாலத்தில், இது, மட்பாண்ட வள நகரான யிசிங் ஆகும். அதன் 1758 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், செழிப்பான மூலவணம் உள்ளது. இயற்கை காட்சி, கண்ணுக்கு விருந்தாக அமைகின்றது.

தைய்வு ஏரியின் 55 கிலோமீட்டர் நீளமான கரையோரத்தை ஒட்டி இந்நகரம் அமைந்துள்ளது. விரிவான நீர்ப்பரப்பில் படகுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பறவைகள் வானில் பறக்கின்றன. இயல்பான KARST நிலத்தோற்றம், இன்நகரத்தில், அற்புதமாக காட்சியளிக்கும் சுமார் நூறு சுண்ணாம்புக் கல் குகைகளை உருவெடுக்கச் செய்தது. அவற்றில் 1934ம் ஆண்டில் திறந்துவிடப்பட்ட சென்சுயெ சுண்ணாம்புக் கல் குகை, குறிப்பிடத் தக்கது. பிரான்சின் LYON கல் குறை, பெல்ஜியத்தின் ஹென்ழன் கல் குகை, சீனாவின் சென்சுயெ கல் குகை ஆகிய மூன்றும் உலகின் முப்பெரும் அற்புதமான சுண்ணாம்புக் கல் குகைகள் என கூறப்படுகின்றன. சென்சுயெ புதிய காட்சி பிரதேசத்தின் பொறுப்பாளர் சென்பௌமிங் எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது--

சுற்றுலாப்பகுதி, நகராட்சி கட்டுமான கமிட்டி, தோட்ட வன பகுதி உள்ளிட்ட வாரியங்களின் ஒன்றிணைந்த திட்டம் மற்றும் பரவலுடன், கடந்த சில ஆண்டுகளில் இப்பிரதேசம் 4 A நிலை என்ற வரையறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, குகைக்கு முன், பூங்கா, குகையில் சுற்றுலா தோட்டம், குகைக்குப் பின் சுற்றுலா, ஓய்வு விடுதி ஆகியவை தழுவிய பிரபலமான சுற்றுலாத் தலமாக அது புனரமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தனிச்சிறப்பியல்புடைய நிலவமைப்பில் குகையில் குளிர்காலத்தில் வெப்பம், கோடைக்காலத்தில் குளிர்நிலை. கோடைக்காலத்தில் இக்குகையில் நுழைந்தால், இயற்கையைன காற்று வீசும் கட்டியத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மேல, நடு, கீழ் என மூன்று மாடிகளில் குகை அமைகின்றது. பார்ப்பதற்கு, அது, கல் செதுக்கு கட்டிடமாக தென்படுகின்றது. குகையில் 7 மீட்டர் உயரமுடைய தொங்கூசிப்பாறைகள் குகையின் நுழைவாயிலில் காணப்படுகின்றன. இரு பக்கங்களில், உயரமான, கம்பீரமான பச்சை நிற சிங்கம்- வெள்ளை யானை வடிவான தொங்கூசிப பாறைகள் அமைகின்றன.

1  2