• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-07 16:40:36    
யிசிங் நகரம்

cri

குகையின் மேல பகுதியில், ஒரு ஆண்டின் நான்கு பருவக்காலங்களும் வசந்த காலம் போல் இருக்கின்றன. மூடுபனி மிதந்து கிடக்கின்றது. குகையின் சுற்றுப்புறங்களில், தொங்கூசிப் பாறைகள் அங்கும் இங்குமாகக் காணப்படுகின்றன. அமர்ந்த ஆடு, நிற்கும் குதிரை, வாயிலிருந்து நீரை கக்கும் கருப்பு டிராகன், நீரில் காணப்படும் தாமரை நிழல் ஆகிய வடிவங்களில் இத்தொங்கூசிப் பாறைகள் அமைகின்றன. குகையின் கீழ் பகுதியில், வானளாவிய கல் பைன் மரம், ஓடும் அருவி, முதலிய இற்கை காட்சிகளும் உங்களுக்கு வியப்பை தரும். இக்காட்சிகளை கண்டுகளித்த பின், படகில் ஏறி, குகையிலான இயற்கை ஆறஅறில் சுற்றுலா வரலாம். பின்னர், கரை ஏறி, மலைகளிடையில் அடர்ந்த காடுகளைக் காணலாம். மலர் மணம் காற்றில் பரவுகின்றது. பறவைகள் பாடுகின்ற. விரும்பினால், சென்சுயெ கிராமத்தில் தங்கி இரவில் இக்கிராமத்தைச் சுற்றிப் பார்க்கலாம். சென்பௌமிங் கூறியதாவது--

இனி, சுற்றுலாவுக்கான நிலைமையையும் சூழலையும் இடைவிடாமல் சீராக்க வேண்டும். உலகுடன் இணைந்து செயல்படுவோம். தென் சீனாவுக்கு வருகை தரும் போது, தாங்கள் கட்டாயம் யிசிங்கிற்கு வர வேண்டும். யிசிங்கிற்கு வருகை தரும் போது, சென்சுயெ வர வேண்டும். அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம் என்றார் அவர்.

யிசிங்கில் மட்பாண்டப் பொருட்களைக் கட்டாயம் காண வேண்டும். பண்டைக்காலம் தொட்டு, மட்பாண்டப் பொருளை உற்பத்தி செய்வதினால் யிசிங் பிரபலமாக விளங்குகின்றது. இன்று, ஊதா நிற மட்பாண்டம், பச்சை நிற மட்பாண்டம், செம்மையான மட்பாண்டம் உள்ளிட்ட 5 வகை மட்பாண்டங்கள், வெளிநாட்டிலும் புகழ்பெற்றுள்ளன. நகரிலுள்ள மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்கள் காட்சியகம் மூலம், சீயநாவின் மட்பாண்ட பண்பாட்டை அறிந்துகொள்ளலாம். மட்பாண்ட மற்றும் பீங்கான் பொருட்களைப் பெரிதும் விரும்பினால், உள்ளூரிலுள்ள பிரபலமான மட்பாண்ட மற்றும் பீங்கான் ஊதா நிற மட்பாண்ட கிராமத்தைப் பார்வையிட்டு வாங்கலாம்.

கேட்பதை விட பார்ப்பது மேலானது என்று சீன பழமொழி ஒன்று கூறுகின்றது. விருந்தோம்பல் மிக்க யிசிங் மக்கள், தங்களின் வருகையை எதிர்பார்க்கின்றனர்.


1  2