• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-08 15:16:03    
ஆப்பிள் பற்றிய இனிப்பு

cri

கலைமகள்—இன்றைய நிகழ்ச்சியில், ஆப்பிளும் ஐஸ்கிரீன்மும் கலந்த தின்பண்டத்தை அறிமுகப்படுத்துகிறேன். இதைத் தயாரிப்பதற்குத் தேவைப்படுத்தும் ஐஸ்கிரீன்ம் நீங்கள் முன்கூட்டியே தயாரித்து விட்டீர்கள்.

ராஜா—ஆமாம், கலைமகள், இதைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்னென்ன?சொல்லுங்கள்

கலை—ஆப்பிள் ஒன்று

வெல்லம் 30 கிராம்

கொஞ்சம் வெண்ணெய், பட்டை, ஜாதிக்காய்

ஐஸ்கிரீன்ம் 150 கிராம்

ராஜா—சரி, நான் மீண்டும் சொல்வேன். கலைமகள், அதன் தயாரிப்பு முறை சொல்லுங்கள்.

கலைமகள்—முதலில், ஆப்பிளின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கி, தட்டில் வைக்கவும். அப்புறம், வாணலியில் வெல்லம் போட்டு சூடாக்க வேண்டும். வெல்லம் கரைந்த பின்பு, ஆப்பிள் துண்டுகளையும், வெண்ணெயையும் அதில் சேர்த்து வேக விட வேண்டும். சுமார் 4 நிமிடத்துக்கு பிறகு, ஆப்பிளின் இனிமையான சுவை ருசிக்கலாம்.

ராஜா—சரி, இத்துடன் இனிப்பு தயாரிப்பு முடிந்ததா?

கலை—இல்லை. ஆப்பிள் மிருதுவாக மாறிய பின், கொஞ்சம் பட்டையும், ஜாதிக்காயும் சேர்ந்து நன்றாக கிளற வேண்டும். வாணலியிலிருந்து எடுத்து, தட்டில் போடவும். ராஜா, இப்போது, இந்த இனிப்பு தயாரிப்பது.

ராஜா—சரி, இந்த தயாரிப்பு முறை மிகவும் எளிதானது. இந்த இனிப்பை உண்ணும் போது, தட்டில் ஆப்பிளும், முன்கூட்டியே செய்யப்பட்டுள்ள ஐஸ்கிரீமும் இணைந்து, சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும். சரிதானே?

கலைமகள்—சரிதான். கோடைகாலத்தில் குளிர்ச்சியான பழமும் ஐஸ்கிரீமும் கலந்த இந்த இனிப்பைத் தின்பது, எமது நேயர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ராஜா—இப்போது, பெய்ஜிங் வானிலை வெப்பமாக இருக்கிறது. நேரம் இருந்தால் நான் வீட்டில் இந்த குளிரான இனிப்பைத் தயாரிக்க பாடுபடுவேன். சரி, கலைமகள் அடுத்த முறை, எந்த வகை தின்பண்டம் அறிமுகப்படுத்துவீர்கள்?

கலை—ராஜா, சீனாவில் சிசுவான் மாநிலத்தின் வறுவல் வகை, மிகவும் புகழ்பெற்றது. இதில், மிளகாய் Kidney beans எனும் வறுவல் குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரத்தில் இந்த வறுவல் கூறுவேன்.

ராஜா—அப்படியா, மிளகாய், Kidney beans முதலியவற்றை முன்கூட்டியே எடுத்துவைத்திருக்கவும்.