• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-08 17:39:20    
இளைய எழுத்தாளர் வான் சியேளலி

cri

வான் சியேளலி எனும் எழுத்தாளர், பெய்ஜிங்கின் ஒரு சாதாரண இளம் பெண், குழந்தைக் காலத்திலிருந்து, அவர் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், இடைநிலை பள்ளியில் படிப்பை முடித்துக்கொண்ட பின்பு, அவர் குடும்பத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கைவிட்டு, சுதந்திரமாக வாழ்ந்தார். 2001ம் ஆண்டில் அவர் தனியாக பிரெஞ்சு தலைநகரான பாரிஸ் சென்றார். வான் சியேளலி குழந்தை காலத்தில் பாரிஸ் பற்றிய அதிகமான கதைகளைக் கேட்டு, அதிகமான நூல்களைப் படித்துள்ளார். பாரிஸ் நகரின் அதி அற்புதக்காட்சிகளும், வரலாறும், காற்றும் உலகில் அதை ஒரு சுவர்க்கமாக ஆக்கிவிட்டதாக, பல பத்திரிகைகள் கூறுகின்றன. கோடைகாலத்தின் ஒரு நாளில், எமது செய்தியாளர், வான் சியேள லியைச் சந்தித்தார். கறுப்பான கூந்தலுடைய அவர், அமைதியாகப் பேசி, செயல்படுகின்றார். பிரான்ஸின் அதி அற்புத உணர்ச்சிக்களை அறிவதற்கா, பிரெஞ்சு மொழியைக் கற்கும் கனவை நனவாக்கும் நோக்குடன், தாம் பாரிஸ் வந்ததாக கூறினார். அவர் கூறியதாவது:

நான் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகின்றேன். குழந்தை காலத்திலிருந்து மற்றவர்கள் பிரெஞ்சு மொழி பேசியதைக் கேட்ட போது, இந்த மொழி மிகவும் அழகானது என நினைத்தேன். ஒரு இளம் பெண், அழகான முகத்துடன், சரளமாக பிரெஞ்சு மொழியைப் பேசலாம் என்பது, மிகவும் நல்லது என்று, அவர் கருத்து தெரிவித்தார்.

ஆனால், பாரிஸ் சென்ற முதல் ஆண்டில், வான் சியேளலி ரொமென்டிக் சூழ்நிலையையும், சுவர்க்கத்தில் இருந்ததை போன்ற வாழ்க்கையையும் உணர வில்லை. அங்கு, அவருக்கு குடும்பமும் நண்பர்களும் இல்லை. மொழி பிரச்சினை இருந்ததால், பாரிஸ் மக்களின் வாழ்க்கை அரங்கில் சேர முடிய வில்லை. இது மட்டுமல்ல, உணவு சமைக்கத் தெரியாததால், நாள்தோறும் வெளியில் சாப்பிட வேண்டியிருந்தது. இதனால், அவருடைய உடல் நலம் மிகவும் பலவீனமானது. ஆனால், பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதில் அவர் உறுதியாக நின்றார். அப்போதைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்து, அவர் கூறியதாவது:

பாரிஸில் முதல் ஆண்டில் மிகவும் உறுதியாக மாறினேன். ஒருவருக்கு, மனஉறுதி தேவை சூழல் நன்றாக இல்லாத போது, மனஉறுதி வேண்டும். இப்போது, ஒரு தீவில் தனியாக தங்க வேண்டி இருந்தால் கூட, குறைந்தது ஓராண்டாவது என்னால் வாழ முடியும் என்றார் அவர்.

வான் சியேளலி, பாரிஸிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டார். ஓராண்டுக்கு பிறகு, பிரெஞ்சு மொழியை சரளமாக பேச முடிந்தது. மொழியில் பெற்ற முன்னேற்றத்தினால், அவர் பல நண்பர்களுடன் பழகி, வாழ்க்கை உலகத்தை படிப்படியாக விரிவாக்கினார். இப்போது, அவர், தனிமையை உணர்வதில்லை. நண்பர்கள் நடத்திய விருந்துகளிலும் கூட்ட்களிலும் அவர் அடிக்கடி கலந்துகொண்டு, பாரிஸின் வணிக சாலையிலும், புகழ்பெற்ற சிறப்பிடங்களிலும் சென்று பார்வையிட்டார். மிகச்சிறந்த பாரிஸ் வாழ்க்கையை அவர் அனுபவித்து, தமது நாட்குறிப்புப் புத்தகத்தில், தமது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பதிவு செய்தார்.