• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-08 22:14:18    
ஓநாய் Tuteng மீது மங்கோலிய இன மக்களின் அன்பு

cri

"ஓநாய் Tuteng" எனும் புதினம்

2004ம் ஆண்டில் "ஓநாய் Tuteng" எனும் புதினம் சீனாவில் பெரிதும் வரவேற்கப்பட்டது. மங்கோலிய இன மக்கள், ஓநாய் மீது அன்பு காட்டுவது, இப்புதினத்தில் வர்ணிக்கப்படுகின்றது. இதனால், சீனாவில் ஓநாய் மீதும் Tuteng மீதும் கவனம் செலுத்தப்படும் பேரெழுச்சி எழுந்துள்ளது.

வடக்கு சீனாவின் விசாலமான புல்வெளியிலும் கண்கொள்ளாத பாலைவனத்திலும், மங்கோலிய, விகுர், மஞ்சு உள்ளிட்ட பத்துக்கு அதிகமான சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்கின்றன. 20 ஆயிரம் ஆண்டுகள் முதல் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொடக்கக் கால சமுதாயத்தில் குலமரபு முறை பழங்குடி இன காலத்தில், இதர பழங்குடி இனங்களிலிருந்து வேறுபடும் வகையில், சில சிறுபான்மை தேசிய இனங்கள் ஒரு வகை விலங்கை, தங்களது பழங்குடி இனத்தின் அடையாளமாகக் கொண்டன, இத்தகைய லிலங்கு, Tuteng எனப்படுகின்றது. அவர்கள் தம் உடலில் இவ்விலங்கின் படத்தை வரைந்து கொண்டனர். அல்லது விலங்கின் தோலை உடலில் போர்த்திக்கொண்டனர். அல்லது இவ்விலங்கின் எனும்பால், அல்லது பற்களால் தம்மை அலங்கரித்தனர். பொதுவாகக் கூறின், ஒரே பழங்குடி இனத்தவர் அனைவரும், ஒரே விலங்கை அடையாளமாகக் கொண்டு, ஒரே முறையில் தம்மை அலங்கரிக்கின்றனர்.

பின்னர், அறிவுக்குறைவினால், தமது முன்னோடிகள், அந்த விலங்குகளிலிருந்து உருவாகினர் என்று கருதி, இவ்விலங்குகள் மீது சிறப்பு மதிப்பு அளித்து, தமது முன்னோடிகளை வழிபடுவது போலவே, இவ்விலங்குகளையும் வழிபடத் தொடங்கினர். இதன் காரணமாக, லிலங்கு மீது மதிப்பும் மலியாதையும் தோன்றின. இதை மேலும் நம்பத் தக்கதாக்கும் பொருட்டு, ஒவ்வொரு பழங்குடி இனங்களிலும், இது தொடர்பான வாய்மொழிக் கதைகள் பரவின. இதனால், இப்பழங்குடி இனத்தின் முன்னோடிகள், விலங்குகளிலிருந்து உருபெற்றது பற்றி, அல்லது, இவ்விலங்குகளால் உயிர் காப்பாற்றப்பட்டது பற்றியும் இதன் மூலம் பழங்குடி இனம் முழுவதும் வாழ முடிந்தது பற்றியும் இக்கதைகள் கூறுகின்றன.

1  2  3