• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-12 08:26:28    
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக் கூட்டம்

cri

ஜூலை திங்கள் 3ஆம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டத்தில், விளையாட்டு வீரர் கமிட்டிக்கான வேட்பாளர் பெயர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்டது. 15 வேட்பாளர்களில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கு முதலாவது தங்கப் பதக்கம் பெற்று தந்த, சீனாவின் புகழ்பெற்ற குறுகிய பாதை விரைவுப் பனிச்சறுக்கல் வீராங்கனை யாங்யாங் இடம் பெறுகின்றார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், சீனாவின் புகழ்பெற்ற மேசை பந்தாட்ட வீராங்கனை தெங் யா பிங்கை அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு வீரர் கமிட்டியில் நுழைந்துள்ள சீனாவின் இரண்டாவது விளையாட்டு வீரராக விளங்குவார்.

வாலிபால் 2005ஆம் ஆண்டு உலக மகளிர் வாலிப்பால் போட்டியின் மகௌ சுற்று ஜூலை திங்கள் 3ஆம் நாள் நடைபெற்றது. சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் உலகில் வலுவான அணியான பிரேசில் அணியைத் தோற்கடித்து மூன்று ஆட்டங்களிலும் வெற்றி என்ற சாதனையுடன் இந்த சுற்றின் சாம்பியன் பட்டம் பெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் சீன அணி அடுத்தடுத்து, ஜெர்மன் மற்றும் நெதர்லாந்து அணிகளைத் தோற்கடித்தது.

ஊக்க மருந்து சீனாவில் பத்தாவது தேசிய விளையாட்டு போட்டிகளின் போது, Hgh எனும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்படும். இதன்மூலம் நேர்மையான ஒரு போட்டி சூழல் தரப்படும். இந்த பரிசோதனை பணி சற்று கடினம். சீனாவின் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் Hgh மருந்து பரிசோதனையை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

பூப்பந்து சிங்கப்பூர் பூப்பந்து ஒப்பன் போட்டி ஜூலை திங்கள் 3 ஆம் நாள் நிறைவடைந்தது. சீன விளையாட்டு வீரர்கள், மகளிர் ஒற்றையர் போட்டி, மகளிர் இரட்டையர் போட்டி, ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய மூன்று போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றனர். மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகில் பெயர் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் சீன வீராங்கனை சாங் நிங் 2-0 என்ற செட் கணக்கில் தனது சகநாட்டவரான சோ மியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகளான சாங் டான், சாங் யாவென் ஜோடி 2-0 என்ற செட் கணக்கில் தமது சகநாட்டவர்களான கௌ லிங், ஹுவாங் சுய் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டியில் சீன வீரர் சாங் ச்சுன், வீராங்கனை கௌ லிங் ஜோடி 2-1 என்ற செட் கணக்கில் தாய்லாந்து அணியின் ஒரு ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.