• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-14 10:16:25    
விம்பில்டன் டென்னிஸ் ஒப்பன் போட்டி

cri

2005ஆம் ஆண்டு விம்பில்டன் டென்னிஸ் ஒப்பன் போட்டி ஜூலை திங்கள் 3ஆம் நாள் லண்டனில் நிறைவடைந்தது. ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சுவீட்சர்லாந்து வீரர் ROGER FEDERER 2-0 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ANDY RODDICK ஐத் தோற்கடித்து மூன்றாம் முறையாக இந்த போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். 2ஆம் நாள் நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை VENUS WILLIAMS 2-1 என்ற செட் கணக்கில் தனது சகநாட்டவரான LINDSAY DAVENPORY ஐத் தோற்கடித்து மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

தடகளப் போட்டி 2005 சர்வதேச தடகள சம்மேளனம் ஏற்பாடு செய்த தடகள தங்கப் போட்டியின் பாரிஸ் சுற்று ஜூலை திங்கள் முதல் நாள் நடைபெற்றது. ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் சீன வீரர் லியூ சியாங் 13.06 வினாடி என்ற சாதனையுடன் மூன்றாம் இடம் பெற்றார். பிரெஞ்சு வீரர் LADJI DOUCOURE 13.02 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் வென்றார். புகழ்பெற்ற வீரர் ALLEN JOHNSON இரண்டாம் இடம் பெற்றார்.

சைகிள் ஓட்டப் போட்டி 2005 TOUR DE FRANCE ஜூலை திங்கள் 2ஆம் நாள் துவங்கியது இந்த போட்டி மொத்தம் 21 கட்டங்களாக என பிரிக்கப்படுகின்றது. முழு தூரம் 3607 கிலோமீட்டராகும். ஜூலை திங்கள் 24ஆம் நாள் நிறைவடையும். இந்த போட்டி பிரான்சின் மேற்கு கரையிலிருந்து தொடங்கி, பிரான்சின் மத்திய மற்றும் வடப் பகுதி,ALPS மலைத் தொடர் PYRENEES மலைத்தொடர், பிரான்சின் மத்திய மலைத்தொடர் ஆகியவை வழியாக கடைசியில் பாரிஸ் வரும். 6 முறையாக இப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அமெரிக்க வீரர் LANCE ARMSTRONS இந்த முறையும் சாம்பியன் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குத்துச் சண்டை உலக தொழில்முறை குத்துச் சண்டை சாம்பியன் பட்டப் போட்டி ஆகஸ்ட் திங்கள் 20ஆம் நாள் சீனாவின் பெய்சிங் மாநகரில் முதன்முதலாக நடைபெறும். போட்டியில் கலந்துகொள்ளும் 8 ஆண் பெண் வீரர்களும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இப்போட்டியில் சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தை சேர்ந்தவர் நடுவராக இருப்பார். வெற்றி பெற்றவர்களில் மூவருக்கு இந்த சங்கத்தின் தங்க இடுப்புப் பட்டை தரப்படும்.

TRI ATHLON 2005ஆம் ஆண்டு ஆசிய TRI ATHLON சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை திங்கள் 3ஆம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்றது. சீன வீராங்கனை வாங் ஹுங் நி மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார். 1996ஆம் ஆண்டுக்குப் பின் சீன வீராங்கனை ஆசிய சாம்பியன் பட்டப் போட்டியின் இந்நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும். மகளிருக்கான குழு போட்டியிலும் சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆடவர் குழு போட்டியில் சீன அணி மூன்றாம் இடம் பெற்றது.