• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-12 08:53:26    
உணவகக் குப்பை கையாளும் நிலையம்

cri
உணவகக் குப்பைகள் என்றால் உணவகங்களின் கழிவு உணவு பொருட்களாகும். அதிக எண்ணெய், விரைவில் கெட்டுப்போவது ஆகியவற்றின் காரணத்தால் அதைக் கையாள்வதில் இன்னல் மிகுந்து காணப்படுகின்றது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு சீன அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் நவீன நுண்ணயிரியல் நுட்பத்தைப் பயன்படுத்தி அண்மையில் பெய்ஜிங்கில் முதலாவது உணவகக் குப்பை கையாளும் நிலையத்தை நிறுவியுள்ளனர். இந்நிலையம் உணவகங்களின் கழிவுப் பொருட்களை உரம் தயாரிப்பதற்கான சிறந்த மூலப் பொருளாக மாற்றியுள்ளது. இப்போது இது பற்றி பார்ப்போம்.

சீனாவில் உணவக குப்பைகள் நகரின் குப்பைகளில் 50 விழுக்காடு வகிக்கின்றன. உணவகக் குப்பைகள் முக்கியமாக பன்றிக்கு தீனியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் பல்வகை நோய் கிருமிகள் உள்ளதால் உணவுப் பொருட்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவித்துள்ளன. தவிர உணவகக் குப்பைகள் நீண்ட நேரம் குவிந்து கிடந்தால் கொசுக்களும் ஈக்களும் மொய்த்து நோய் கிருமிகள் பிறக்கின்றன. இது நகரின் சுற்று சூழலைப் பாதிக்கின்றது.

நவீன நுண்ணுயிரியல் நுட்பத்தின் வளர்ச்சியுடன் சீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உணவகக் குப்பைகளைக் கையாளும் பிரச்சினையைத் தீர்த்துவிட்டனர். பெய்ஜிங் மாநகரின் வடமேற்கு பகுதியின் கைய்தியென் வட்டத்தின் சாந்தி வீதியில் சீனாவின் முதலாவது உணழகக் குப்பை கையாளும் நிலையம் நிறுவப்பட்டுள்ளனது. இந்நிலையம் நாள்தோறும் 1200 கிலோகிராம் உணவகக் குப்பைகளைக் கையாளும் திறன் பெற்றது.

பெய்ஜிங் சியா போ வென் உயிரின அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உணவகக் குப்பைகளைக் கையாளும் தொழில் நுட்பத்தை ஆராய்ந்து வளர்க்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமை பொறியலாளர் சியா யு சியை இந்நிலையம் ஏ கிருமி எனப்படும் இயற்கை கிருமிகளால் உணவகக் குப்பைகளை சிதைக்கின்றது என்று கூறினார். அவர் கூறியதாவது"இத்தகைய கிருமிகள் செச்சுவான் மாநிலத்தின் உயர் மலையிலிருந்து தேடிக் கண்டுபிடிக்கப்பட்டன. இவை முற்றிலும் இயற்கையானவை. இது ஒரு வகை கலப்பு கிருமிகள். அவற்றில் பத்துக்கு மேலான குரிமி வகைகள் உள்ளடங்குகின்றன. குறிப்பிட்ட கால நிலை மற்றும் புழுக்க நிலையின் கீழ் உணவுக் கழிவை சிதைத்து புளிப்பாக்கி பின் புதிய நுண்ணுயிரி பொருட்களாக்க முடியும்"என்றார் அவர்.

இந்நிலையத்தில் 6 உயர் வேக உயர் வெப்ப நுண்ணுயிர் பொருள் கையாளும் உலைகள் உண்டு. ஒவ்வொன்றும் கணிணியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலையத்தின் பணியாளர் லீ வெங் லொங் கூறியதாவது......உரை 2...............

"நாங்கள் கோதுமை தவிடுகளில் ஏ கிருமிகளை வைத்து பின் ஏணி மூலம் உலையில் ஏற்றுகிறோம். 4.5-5 மணி நேரம் சூடாக்கி கலவை செய்து புளிப்பாக்கி பின் காய வைக்கிறோம். பிறகு புதிய நுண்ணுயிரி கிருமி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன"என்றார் அவர்.

ஏ கிருமிகள் உரிய சுற்று சூழலில் இடைவிடாமல் இனப்பெருக்கம் செய்ய முடியும். அப்போது உணவகக் குப்பைகளை அவை தின்னுகின்றன என்று அவர் கூறினார். ஆக்கப் பொருட்கள் வெளியேறும் இடத்தில் குவியல் குவியலான பொன்னிற பொடியை எங்கள் செய்தியாளர் கண்டார். இது உரம் தயாரிப்பதற்கான தரமிக்க மூலப் பொருளாகும்.

இத்தகைய உயிரியல் உரங்களைப் பயன்படுத்தினால் ஸ்ட்ராபெரி பழத்தின் விளைச்சல் சுமார் 30 விழுக்காடு கூடுதலாகும். ஆப்பிள் விளைச்சல் ஒரு ஹெக்டருக்கு 3 டன் கூடுதலாக விளையும். அதனிடையில் இப்பழங்களில் இனிப்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரித்துள்ளது.

உணவகக் குப்பைகளைத் தூய்மைப்படுத்துவதில் கையாளும் தொழில் நுட்பம் கழிவுப் பொருட்களைச் செல்வமாகும் அதேவேளையில் உணவகத் தொழிலில் நீண்டகாலம் நீடித்திருந்த சுகாதாரப் பிரச்சினையையும் தீர்த்துவிட்டது.

திரு கோ பின் ஒரு உணவகத்தை நடத்துகிறார். அவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது "இப்போது உணவகக் குப்பைகளை ஏற்றிச் செல்ல ஒரு நாளைக்கு மூன்று முறை வண்டிகள் வருகின்றன. ஆகவே இங்கு தூர் நாற்றம் வீசாது. எங்கள் சமையலறையின் சுற்று சூழல் சீரடைந்துள்ளது"என்றார் அவர்.

சீனாவில் உணவகக் குப்பைகளைக் காயாளும் தொழில் நுட்பமானது சுற்று சூழல் மற்றும் உணவு பொருட்களின் பாதுகாப்பு பிரச்சினையைத் தீர்த்துள்ளது. அன்றி உணவகக் குப்பைகளை செல்வமாக்கி மூல வளங்களின் மீண்டும் பயன்பாட்டை நனவாக்கி வேளான் தொழில் விளைச்சல் அதிகரிப்புக்கு வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று சீனாவின் நிபுணர்கள் ஏகமனதாக கருதுகின்றனர்.

தற்போது அதன் பயன்பாட்டுக்கு சீனாவில் சிறந்த எதிர்காலம் உண்டு என்று தெரிய வருகின்றது. எடுத்துக்காட்டாக நகர சுற்று சூழலை மேலும் சீராக்கி 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் வகையில் பெய்ஜிங் மாநகராட்சி இந்நுட்பத்தை படிப்படியாக பரவலாக்கும். அத்துடன் 2008ம் ஆண்டுக்கு முன் நகரம் முழுவதிலும் உணவகக் குப்பைகளைக் கையாள திட்டமிட்டிருக்கின்றது. தவிர ஷாங்காய், வூ ஹான் உள்ளிட்ட சீனாவின் சில பெரிய நகரங்களிலும் இத்தகைய கையாளும் நிலையங்கள் நிறுவப்படும்.