• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-11 09:46:46    
சிறப்பு பயணம் பற்றிய நிகழ்ச்சி

cri
ரா------வணக்கம் நேயர்களே. நடுவில் இரண்டு வாரங்கள் காணாமல் போய்விட்டு, இப்போது திரும்புவும் உங்களைச் சந்திக்க வந்து விட்டோம். வி-------சீனப் பயணம் மேற்கொண்ட சிறப்பு நேயர் திருச்சி அண்ணா நகர் வி தி ரவிச்சந்திரணன் அனுபவத் தொகுப்பை ஒலிபரப்புவதற்காக நேயர்நேரம் நிகழ்ச்சி நடுவில் நிறுத்தப்பட்டது. இப்போது, மீண்டும் உங்களுடன் உரையாடுவது மகிழ்ச்சி தருகிறது. ராஜா, இந்த வார நேயர்களின் கருத்துக்களை கேட்கலாமா ரா-------ஆகா, முதலில் நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே கே போஜன் ஏப்ரல், மே திங்களில் எழுதிய கடிதங்கள்。 இவர் பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில், பாண்டியராஜன், செல்வம் பாலகுமார், ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன் ஆகியோர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேயர் மன்றம் திறக்க இரண்டு, மூன்று நேயர் இருந்தாலும் போதும் என்று சொன்னார்கள், நீலகிரியில் அதிக நேயர்கள் இல்லை என்றாலும், மன்றம் துவக்கப்படும் என்று கூறுகிறார். மேலும் மக்கள் பலரிடம் இப்போது கடிதம் எழுதும் பழக்கமும், ஆர்வமும் குறைகிறது என்று கூறி வருத்தப்படுகிறார். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என்ற கட்டுரையையும், நல வாழ்வுப் பாதுகாப்பில் கறிவேப்பிலை பற்றி கூறிய கருத்தையும் பாராட்டியுள்ளார். வி-----நேயர் போஜனின் ஆர்வத்தைப் பாராட்டுகிறோம், அவரால் தொடர்பு கொள்ளக் கூடிய நேயர்களை ஒருங்கிணைத்து, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் நீலகிரி மாவட்ட நேயர் மன்றத்தை தொடங்கலாம். தனித்தனி ஆளாகச் செயல்படுவதை விட ஒரு அமைப்பாகச் செயல்படுவது நல்லது அல்லவா, சரி அடுத்த கடிதம் ரா----மதுரை அண்ணா நகர் நேயர் என் ராமசாமி, ஏப்ரல் மே திங்களில் எழுதிய கடிதங்கள் இப்போது மாதம் இரு முறை எங்கள் கடிதங்களுக்குப் பதில் கிடைக்கிறது. இனி வரும் காலங்களில் நேயர்களின் ஒவ்வொரு கடிதத்திற்கும் உடனடியாக பதில் கிடைத்தால் ஊக்கமாக இருக்கும் என்று எழுதியுள்ளார். மேலும், 12-5-05 அன்று அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சுற்றத்தை மறக்கலாம், சுத்தத்தை மறக்கக் கூடாது என்று விளக்கியதைப் பாராட்டியுள்ளார். வி------பாராட்டுக்கு நன்றி. நேயர்களின் ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் தர முயற்சிக்கிறோம். முடியாத போது கடிதம் கிடைத்த தகவலை நேயர் கடிதம் நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கிறோம். முக்கியமான கடிதம் என்றால், நேரடியாகவே பதில் கடிதம் எழுதுகிறோம் எனவே மனம் உண்டு, பணம் இல்லை என்பது போல நோக்கம் உண்டு, நேரம் இல்லை.