• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-12 08:41:43    
தமிழ் மூல சீனம் பற்றிய நிகழ்ச்சி

cri
ரா------ஆரணி நேயர் R ராஜ்க்குமார். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியைக் கேட்டும், நாம் அனுப்பியுள்ள புத்தகத்தைக் கொண்டும் நண்பர்களுடன் சேர்ந்து சீன மொழி கற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். செஞ்சி நேயர் ஜி, கே, ராஜா தேசிங்கம் நாம் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்ததாகக் கூறுகிறார். திருச்சி மாவட்டம் மணக்கால் நேயர் ரா, அன்பழகன் பிப்ரவரி திங்களில் நாம் ஒலிபரப்பிய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பாராட்டி எழுதியுள்ளார். வி------பாராட்டுக்களுக்கும், ஆர்வத்துக்கும் நன்றி நேயர்களே. நீங்கள் எழுதும் கடிதத் தாளிலும், உறையிலும் உங்கள் பெயர், முகவரி மாவட்டம் ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டுகிறோம். நேயர் எண் இருக்குமானால் அதையும் தெளிவாக குறிப்பிடுங்கள். ரா------வேலூர் மாவட்டம் திமிரி நேயர் முனுகப்பட்டு, பி கண்ணன் சேகர் ஏப்ரல் திங்களில் ஒலிபரப்பான செய்திகளையும், செய்தித் தொகுப்பையும் கேட்டு தனது கருத்துக்களை விரிவாக எழுதியுள்ளார். வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் மார்ச் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றையும் மே திங்கள் நிகழ்ச்சிகளையும் பாராட்டி வான் அஞ்சல்களை அனுப்பியுள்ளார். குறிப்பாக, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் ஒரேநேயர் இடம் பெறுவதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட நேயர்கள் ஓரிடத்தில் கூடி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கலாம் என்று கூறிவிட்டு, நேயர் நேரம் நிகழ்ச்சி இப்போது செம்மையாக வழங்கப்படுகிறது என்று எழுதியுள்ளார். மேலும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சிய்ல பெய்சிங் இந்தியன் சிச்சன் உணவக சமையல் கலைஞர் ரவீந்திரன் சீன உணவு வகை அறிமுகப்படுத்தியதைப் பாராட்டியுள்ளார். தமிழர்கள் மூலம் மேலதிக் சீன உணவுவதைகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக் கேள்கிறார். புதுவை வெங்கட்டி நகர் நேயர் என் பாலகுமார் மார்ச் திங்களில் எழுதிய கடிதம், சீன வானொலிக்காக உருவாக்கப்பட்ட வலைப்பதிவைப் பார்த்த பின் அமெரிக்கா ஒமன சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து நேயர்கள் சீன வானொலிக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள் என்று கூறுகிறார். மேலும் சீன வானொலி இணைய தளத்தை பயன்படுத்தும் அதேவகையான எழுத்துக்களைப் பயன்படுத்தி வலைப்பதிவை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார். அதன் முகவரி....................................................தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் பாடத்திட்டம் மிகவும் அழகாக சீன எழுத்துக்களுடன் தெளிவாகத் தெரிகிறது. இதைப்பற்றிய தகவலை sms குழுவிற்கு படிப்படியாக அணுப்புவதாகவும் புதுவை பாலகுமார் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மூலம் சீனம் வாரத்திற்கு நான்கு நிகழ்ச்சிகளாக அதிகரித்ததன் பலன் இப்போது தெரிகிறது. பல நேயர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். வி-------நேயர்களே. உங்களுடைய பாராட்டுக்கும், ஆர்வத்திற்கும், அக்கறைக்கும் நன்றி. நேயர் மன்ற வலைப்பின்னலும் sms குழுவும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.