• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-15 09:20:29    
உணவு அரங்கம் பற்றிய நிகழ்ச்சி

cri
ரா-------மணமேடு நேயர் எம் தேவராஜா மே திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றை பாராட்டி எழுதியுள்ளார். குறிப்பாக பெய்சிங் இந்தியன் சிச்சனில் பணிபுரியும் தமிழர்களின் தொடர்பால் நமது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்து விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் பல சீன உணவுவகைகளை எளிமையான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். அதே வேளையில், உணவுத் தூய்மையை வலியுறுத்திய அறிவியல் உலகம் நிகழ்ச்சியையும் பாராட்டியுள்ளார். சென்னை நேயர் எஸ் ரேணுகா தேவி, நிகழ்ச்சிகளில் சற்று தொய்வு தெரிகிறதே என்று எழுதியுள்ளார். இலக்கிய உலா நாடகம் போன்றவை 10 நிமிட நிகழ்ச்சியானாலும் நன்றாக இருக்கும் என்கிறார். வி-------பாராட்டுக்கும், யோசனைக்களுக்கும் நன்றி. யோசனைகளை முடிந்தவரை செயல்படுத்த முயற்சிக்கிறோம். ரா-------குமரி மாவட்டம் முன்கிறை நேயர் ஜெயபநி பாரதி, நமது பல நிகழ்ச்சிகளைப் பாராட்டி விட்டு, நேயர்களின் படைப்புக்களையும் ஒலிபரப்பலாமே என்கிறார். இலங்கை புதிய காத்தான்குடி நேயர் பாத்திமா ஷிபானா, பொது அறிவுக்காக சீன வானொலியின் வெளி நாட்டு செய்திகளைக் கேட்பதாகக் கூறுகிறார். பெரம்பலூர் மாவட்டம் தேவனூர் நேயர் ஜோதிலட்சுமி பொது அறிவுப் போட்டி மாதம் தோலும் நடத்தலாம் என்கிறார். மேலும் முக்கிய நேயர்களின் முகவரிகள் நிகழ்ச்சிக் குறிப்புக்கள், ஒலிபரப்பு நேரம் போன்றவற்றை ஒரு புத்தகமாகத் தயாரித்து வினியோகிக்கலாம் என்று கூறுகிறார். வி-------நேயர்களே, பொது அறிவுப் போட்டியை திங்கள்தோறும் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நேயர்கள் சொந்தமாக எழுதி அனுப்பும் படைப்புக்கள் நாங்கள் எதிர்பார்க்கும் தரம் உடையதாக இருந்தால் அவற்றை ஒலிபரப்புவது பற்றிப் பரிசீலிப்போம். ரா-------ஈரோடு மாவட்டம் எஸ் கே பாப்பம் பாளையம் நேயர் பி டி சுரேஷ் குமார், சீனாவில் உள்ள தமிழர் குழு நடத்திய புத்தாண்டு கொண்டாட்டம் நன்றாக இருந்தது. சினிமா பாடல் பாடியதை விட வேறு கதைகள் பற்றி கூறினால் நன்றார இரந்திருக்கும் என்கிறார். சேலம் பாத்திமா நகர் எஸ் ஆர் டி பாலசுப்பிரமணியம் ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றமும் ஆரணி கங்கா யாங்ச்சி மன்றம் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியும் ஆனந்தம் அடையச் செய்தது. கோவை மாவட்ட நேயர் மன்றத் துவக்க விழா பற்றிய ஒலிபரப்பு அந்த விழாவுக்கு போக முடியாத வருத்தத்தை நீக்கியது என்று கூறுகிறார். ஊஞ்சலூர் நேயர் பசுபதி வெங்கடேஸ்வரன், கடந்த இரண்டாண்டுகளாக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பைக் கேட்டு வந்த போதிலும் இப்போது தான் கடிதம் எழுதும் ஒரு புதிய நேயர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, செய்தித் தொகுப்பு, சீனப் பண்பாடு இன்ப்பயணம், அறிவியல் உலகம் தமிழ் மூலம் சீனம் ஆகிய நிகழ்ச்சிகள் தமக்கு மிகவும் விருப்பமானது என்று கூறுகிறார். வி-------பாராட்டுக்கு நன்றி