• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-13 09:34:05    
சாமானியவாதம் என்ன

cri
“சாமானியவாதம்”என்ற சொல் அடிக்கடி செய்தித் தாள்களில் காணப்படுகின்றது. இது எதைக் குறிக்கின்றது என்று சீனாவின் ஹு பேய் மாநிலத்திலுள்ள வாசகர் கோ பியே கேட்கின்றார். இந்த கேள்வி குறித்து விரிவாக ஆராய்ந்து தொடர்புடைய தகவலை தேடி படித்த பின் இங்கே வாசகர் கோ பியேக்கு தி கலையரசி பதிலளிக்கின்றார். “Populism”என்றால் பொது மக்கள் வாதம் என்று பொருள். சாமானியம் என்பது அதற்கு இன்னொரு பெயராகும். 19ம் நூற்றாண்டில் ரஷியாவில் பரவிய சமூக முன்னேற்ற போக்கு இதுவாகும். பொது மக்களின் மதிப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் அளவுக்கு மீறி முக்கியத்துவம் தருவது பாமரத்தனம், பொது மக்கள் நோக்கு ஆகியவற்றை அரசியல் இயக்கம் மற்றும் அரசியல் அமைப்புமுறையின் சட்டப்பூர்வ தன்மையை உருவாகுவதற்கு அடிப்படைக் கருத்தக கருதுவது பொது மக்களை கவரக் கூடிய தீவிர சீர்திருத்தத்தை மேற்கொள்வது, சாதாரண மக்களை அரசியல் சீர்திருத்தத்தில் ஒரேயொரு தீர்க்கமான சக்தியாக கருதுவது, பொது மக்களின் ஒன்றிணைப்பு மக்களின் வாக்குகள், மக்கள் வழங்கும் அதிகாரம் ஆகியவை கொண்ட சாமானியவாத மதிப்பை உறுதிப்படுத்துவது, பொது நிலைமையில் பயன் தரும் முறையில் மக்களை கட்டுப்படுத்துவது என்பன இதன் அடிப்படை தத்துவத்தில் அடங்கும். சாமானியவாதம் 19ம் நூற்றாண்டின் 40-50ம் ஆண்டுகளில் ரஷியாவில் உருவானது. அப்போது ரஷியாவின் மன்னராட்சியில் ஊழல் அதிகமாக இருந்தது. உற்பத்தி வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும் கடுமையாக தடைப்பட்டிருந்தன. மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவம் விரைவாக வளர்ந்த போக்கில் பல உள் முரண்பாடுகள் காணப்பட்டன. இந்த பின்னணியில்தான் சாமானியவாதிகள் ரஷியாவின் எதிர் காலத்தை நாட துவங்கினர். பின்தங்கிய நாடுகள் சோஷலிச நாடாக மாறுவதை ஆதரித்தனர். பொது மக்களின் மறுமலர்ச்சி ஆக்கப்பூர்வமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தினர். அதேவேளையில் ரஷியாவில் உள்ள கிராம அமைப்பு முறையை விவசாயிகளை மையமாகக் கொண்ட முறையாக்கினர். இச்செயல் லெனின் தலைமையில் இயங்கிய ரஷிய சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் மார்க்சிஸம் ரஷியாவில் பரவலானதும் சாமானியவாதம் பலவீனமாகியது. வெளிப்படையாகப் பார்த்தால் இதில் சாமானியவாதம் மக்களை மையமாக கொண்டதாகும். உண்மையில் குடி மக்களின் தனிப்பட்ட கௌரவமும் தனிநபர்பட உரிமையும் குறைவு. சாமானியவாதிகள் மக்களை தூண்டினாலும் இந்த வழிபாட்டில் மக்கள் என்பது “கற்பனை மக்கள்” என்பதாகும். உண்மை மக்களை அவர்கள் மிகவும் அலட்சியம் செய்தார்கள். சாமானியவாதிகள் அதிகார தன்மையை எதிர்க்கின்றனர். ஆனால் எதிர் குழுக்கள் நிலவுவதை அவர்கள் அனுமதிக்க வில்லை. பார்வையாளர்கள் இருப்பதைக் கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடியாவில்லை. எங்களுடன் யார் இணைந்து இருக்கவில்லையோ அவர்கள் எங்களை எதிர்ப்பவர்கள் யாரும் எங்களை எதிர்த்தால் அவர்கள் தான் எங்கள் எதிரிகள். அவர்களை நாங்கள் அழிக்க வேண்டும் என்று அப்போதைய ரஷிய சாமானியர்கள் கருதினார்கள்.