• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-15 10:35:47    
விரைவாக வளர்ந்து வரும் சிறுபான்மை தேசிய இனப்பிரதேசம்

cri

சீனா, 56 தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றிணைந்த நாடாகும். ஹன் இனம் தவிர, ஒப்பீட்டளவில் மக்கள் தொகை குறைவான இதர தேசிய இனங்கள், சிறுப்பான்மை தேசிய இனம் என கூறப்படுகின்றன. அவற்றின் மக்கள்தொகை, பத்து கோடிக்கு மேலானது. அவற்றில் 22 இனங்களின் மக்கள் தொகை, மிகவும் குறைவாக ஏறக்குறைய 6 லட்சமாக மட்டுமே உள்ளது. அவர்கள் பெரும்பாலானோர் எல்லைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். அங்கு போக்குவரத்து வசதியில்லை. இயற்கை சூழல் மோசம். சிறுப்பான்மை தேசிய இனங்களில் மேலும் கவனிக்கப்பட வேண்டிய இனத்தவர்கள், அவர்களாவர்.

இதற்காக, சீன அரசு, சிறப்பு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அரசவை அண்மையில் அங்கீகரித்த குறைந்த மக்கள் தொகையுடைய தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு என்ற திட்டம், இத்தகைய தேசிய இனங்களுக்காகவே, சிறப்பாக வகுக்கப்பட்டது. விரிவாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில், உதவிடும் வழிமுறை வகுக்கப்பட்டது. அதாவது, கிராமம் கிராமமாக உதவிகள் வழங்கப்படும். இவ்வினத்தவர்கள் வாழும் இடங்களில், மின்பயன்பாடு, சாலைப்போக்குவரத்து, நீர்பயன்பாடு முதலிய இன்னல்களைத் தீர்ப்பது, இவ்வுதவியின் மையமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களை வறுமையிலிருந்து விடுபடச் செய்வதே, இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

ஒப்பீட்டளவில், தேசிய இனப்பிரதேசங்கள், பின்தங்கிய நிலையில் இருக்கும் நிலைமையில், சீன அரசு வெகு காலத்துக்கு முன்பே, பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன், துவங்கியுள்ள மேற்கு பகுதி வளர்ச்சி நெடுநோக்கு திட்டம், பிரதேசங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு மாபெரும் பங்குபணியை ஆற்றியுள்ளது. சீன தேசிய இன விவகார கமிட்டியின் துணை தலைவர் மோ பெங் ரி பேசுகையில், எதிர்காலத்தில், தேசிய இனப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தக் கூடிய திட்டவட்டமான நடவடிக்கைகள் பலவற்றை சீன அரசு மேற்கொள்ள இருப்பதாகக் கூறினார். அவர் கூறியதாவது.

தேசிய இனப்பிரதேசத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவியாக, சீன அரசு நிதியை அதிக அளவில் ஒதுக்கியுள்ளது. அன்றி, தொழில் நுட்பம், திறமைசாலி தகவல், கொள்கை ஆகியவற்றிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதில் தேசிய இனப் பிரதேசங்களுக்கு உதவி அளித்துள்ளது. மத்திய அரசு, தேசிய இனப் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் பெரும் கவனம் செலுத்துகின்றது. ரெயில்வே பாதை கட்டுமானம், உயர்வேக நெடுஞ்சாலை, தொலைத்தொடர்பு திட்டப்பணி, நீர்ச்சேகரிப்பு திட்டப்பணி ஆகியவர்றினால், அடிப்படை வசதிகளின் நிலைமையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

1  2  3