• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-14 13:16:54    
பழஞ்சீனாவின் முகழ்பெற்ற மருத்துவவியல்

cri

வணக்கம் நேயர்களே இன்றைய நிகழ்ச்சியில் பழஞ்சீனாவின் முகழ்பெற்ற மருத்துவர்கள் பற்றிக் கூறுகின்றோம். எழுதியவர் கடிகாசலம்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹுவான் எனும் ஆட்சியாளர் புகழ்பெற்ற மருத்துவர் பியான் சுயூவை அரண்மனையில் சந்தித்தார். அவரைக் கூர்ந்து கவனித்த மருத்துவர் உயிரைப் பறிக்கும் வியாதிக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆட்சிக் கட்டில் இருந்த ஹுவான் வயதில் இளையவர். பதவிக்கு வந்த சில காலம் மட்டுமே ஆகியிருந்தது. எனவே மருத்துவரின் கருத்துரையை புறக்கணித்தார். என்னி நகையாடினார்.

 

அதன் பிறகு இரண்டு முறை அவரை மருத்துவர் பியான் சந்தித்தார். அப்போதும் அவரது உடல் நலக் குறைவு குறித்துப் பேசினார்.

நான்காவது முறை சந்தித்த போது ஒரு முறை உயலை நன்கு பார்த்தவுடன் ஒரு வாரத்தை கூடப் பேசாமல் மருத்துவர் சென்று விட்டார். உயனே பணியாளர் ஒருவரை அழைத்து "என்ன காரணம்?என்று கேட்டு வா"என்று ஹுவான் கூறினார். பணியாளரும் ஓடோடிச் சென்று மருத்துவரை விசாரித்தார்.

"இனி, பயன் இல்லை. நோய் முற்று விட்டது. உயலின் முக்கிய உறுப்புகளைப் பாதித்து விட்டது. இப்போது அதைக் குணப்படுத்தவே முடியாது"என்றார் மருத்துவர் பியான்.

அது போலவே ஒரு சில நாட்களுக்குப் பின்னர், ஹுவான் இரந்து போனார்.

இந்த நிகழ்வு சீனாவில் மிகவும் பிரபலமாக விளங்குகின்றது. மருத்துவர் பியானின் மருத்துவத் திறபை போற்றுவது இதன் நோக்கமாகும். பாரம்பரிய சீன மருத்துவ நோயறி முறை நான்கிலும் பியான் தலைசிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புழஞ்சீனாவில் 14 ஞானியர் இருந்தனர். மருத்துவவியல் ஞானி ஸாங் ஸாங்ஜிங்(ZHANG ZHONGJING)மருந்தியல் ஞானி சுன் சிமியாவ்(SUN SIMIAO) ஆகிய இருவரும் இலக்கியவியல் ஞானி கண்பியுசியஸ் இராணுவத் துறை ஞானி சுன் வு(SUN WU)ஆகிய இருவருக்கும் இணையாக ஈடாகக் கருதப்பட்டனர்.

பவஞ்சீனாவில் புகழ்பெற்று விளங்கிய பாரம்பரிய சீன மருத்துவர்கள் நால்வரில் மேலே குறிப்பிடப்பட்ட இருவருடன் பியான் ச்சுவும் ஹுவா துவாவும் இடம் பெறுகின்றனர். இந்த இருவரு ம் ஞானி எனும் நிலைக்கு உயர்த்தப்பட வில்லை என்றாலும் "மந்திர மருத்துவர்கள்"என்று மதிப்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

சீன மருந்தியலின் "தந்தை"என்று பியான் ச்யூ போற்றப்படுகின்றார். "பினத்துக்குஉயிர் கொடுக்கும் ஆற்றல் கொண்டவர்"எனப் பழைய ஆவாயங்களில் அவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். மிகச் சிறந்த ஊசித்துறையீட்டு மருத்துவரான பியான் எலும்பு, கல் ஆகியவற்றால் ஆன ஊடிகளுக்குப் பதிலாக முதன்முதல் ஆன ஊசியைப் பயன்படுத்திப் புரட்சி செய்தார்.