• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-14 13:25:07    
சமூகவியல் ஒலிம்பிக்

cri
வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பயன்படும் உயர் அறிவியல் தொழில் நுட்பம் பற்றி கூறுகின்றோம்.

29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையை 2001ம் ஆண்டு பெய்சிங் பெற்றுக் கொண்டது. அப்போது முதல் சீனா இதற்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கி விட்டது. எவ்வாறு அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக திகழ்கின்றது. இப்போது இது பற்றி பார்ப்போம்.

பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி விண்ணப்பம் செய்த போதே "பசுமையான ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், சமூகவியல் ஒலிம்பிக்"என்ற முழக்கத்தை முன்வைத்தது. "அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக்"என்பது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முதலாக தெரிவிக்கப்பட்ட கருத்தாகும். பெய்சிங் மாநகராட்சியின் துணை மேயர் லின் வென் யி அம்மையார் இது பற்றி கூறியதாவது"அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்பது"பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்ுப் போட்டியின் மூன்று கருத்துக்களில் ஒன்றாகும். "பசுமையான ஒலிம்பிக், பயன்பாட்டு ஒலிம்பிக்"ஆகியவற்றுக்கு முக்கிய ஆதார தூணாகவும் அது விளங்குகின்றது. உலகெங்கும் புதிது புதிதாக உருவெடுத்துள்ள அறிவியல் தொழில் நுட்பத்தின் சாதனைகளை ஒன்றிணைத்து 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்பது அதன் நோக்கம் என்றார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போடிடியை நடத்தும் உரிமையை வெற்றிகரமாகப் பெற்ற பின் சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் பெய்சிங் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டியும் "அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் செயல் திட்டத்தை"வகுத்தன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மைதானங்கள் மற்றும் திடல்களின் கட்டுமானம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பாதுகாப்புக்கு உத்தரவாதம், பெய்சிங் நகரில் காற்று சூழல், நீர் வளம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொழில் நுட்பம், விளையாட்டு அறிவியல் தொழில் நுட்ம் ஆகிய 6 துறைகளிலும் அறிவியல் ஆய்வு பணியை முக்கியமாக நடத்துவதென அவை முடிவெடுத்தன. அத்துடன் 10 முக்கியமான திட்டப் பணிகளையும் செயல்படுத்த துவங்கியுள்ளன. "பெய்சிங் மின்னணு போக்குவரத்து விதிகள்"மின்சாரத்தால் இயக்கப்படும் மோட்டார் வாகன இயக்கத்தின் முன் மாதிரிகள், "மொழி பெயர்ப்பு தகவல் சேவை அமைப்பு"ஆகியவை இதில் இடம் பெறுகின்றன.

இதற்காக சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் 300 கோடி யூவான் முதலீடு செய்துள்ளன. பல்லாயிரம் அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் அதன் அறிவியல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில திட்டப் பணிகள் இப்போது பெரும் முன்னேற்றம் கமண்டுள்ளன. சீன அறிவியல் கழகத்தின் தானியங்கி ஆய்வக ஆராய்ச்சியாளர் லியூ பின் "மொழிப் பெயர்ப்பு தகவல் சேவை அமைப்பின்"ஆராய்ச்சி பணியில் பங்கெடுத்தார்.