• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-15 20:19:39    
மிளகாய் அவரைக்காய்

cri

கலைமகள்—இன்று, தென்மேற்கு சீனாவிலுள்ள சிசுவான் மாநிலத்தின் உணவு வகை பற்றி கூறுகின்றோம். சிசுவான் மாநிலத்தின் மக்களுக்கு காரமான மிளகாய் உணவுகள் மிகவும் பிடிக்கும். அவற்றில், மிளகாய் அவரைக்காய் குறிப்பிடத்தக்கது.

ராஜா—அப்படியா, கலைமகள், இன்று, மிளகாய் அவரையின் தயாரிப்பு முறை சொல்வீர்களா?

கலைமகள்—ஆமாம். இனி, மிளகாய் அவரைத் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களைச் சொல்கின்றேன்.

ராஜா—சொல்லுங்கள்.

கலைமகள்—அவரைக்காய், 300 கிராம், எண்ணெய் 200 கிராம், கொஞ்சம் உப்பு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவை எடுத்துவையுங்கள்.

ராஜா—சரி, அதன் தயாரிப்பு முறை சொல்லுங்கள்.

கலைமகள்—முதலில், அவரைகாயை நன்றாக சுத்தம் செய்து, துண்டுகளாக அரியுங்கள். பிறகு, வாணலியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெயை ஊற்ற வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட அவரைகாய்களை எண்ணெயில் போட்டு, மிதமான சூட்டில் சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும். சரியா

ராஜா—சரி. இரண்டு நிமிடத்துக்கு பின், வதங்கிய அவரைக்காயை, எண்ணெயிலிருந்து எடுத்து, தட்டில் போடணும். சரியா?

கலைமகள்—சரி தான். வாணலியிலுள்ள எண்ணெயை வடித்துவிட்டு, கொஞ்சம் எண்ணெய் மட்டும் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.

ராஜா—சுமார் 20 வினாடிகளுக்கு பின், மிளகாயின் காரச்சுவையை உணரலாம்.

கலைமகள்—ஆமாம். இந்த சுவை, சிசுவான் மாநிலத்து உணவின் தனித்தன்மையாகும்.

ராஜா—அப்படியா, கலைமகள், இப்பொழுது, அவரைக்காயை வாணலியில் போடலாமா?

கலைமகள்—போடலாம். இனி, அவரைக்காயை வாணலியில் போட்டு, கொஞ்சம் உப்பு சேர்த்து, இளம் சூட்டில் நன்றாக கிளற வேண்டும். ஒரு நிமிடத்துக்கு பின், மிளகாய் அவரை என்ற காரசாரமான தொடுகறி தயார்.

ராஜா—நன்றாக இருக்கிறது. இந்த தொடுகறியை சோற்றுடன் பிசைந்து தின்பது, ருசியாக இருக்குமென நம்புகின்றேன்.

கலைமகள்—ஆமாம். இந்த தொடுகறி எனக்கும் பிடிக்கிறது.

ராஜா—சரி, கலைமகள், அடுத்த முறை, எந்த வகை தின்பண்டம் அறிமுகப்படுத்துவீர்கள்?

கலைமகள்—அடுத்த முறை, சிசுவான் மாநிலத்தின் மற்றொரு உணவை கூறுகின்றேன். இதன் பெயர் மிளகாய் கோழி சிறகு.

ராஜா—இதற்கும், மிளகாய் தேவைப்படும் அல்லவா?

கலைமகள்—ராஜாராம், இது வேறுபட்டது. அடுத்த முறை அறிமுகப்படுத்தப்படும் மிளகாய் கோழி சிறகு எனும் தின்பண்டத்தில் பயன்படுத்தப்பட்ட மிளகாய், பச்சை மிளகாய் தான்.

ராஜா—அப்படியா, அடுத்த முறை, பச்சை மிளகாய், கோழி சிறகு, இஞ்சி, உப்பு எண்ணெய், மிளகு முதலியவற்றை முன்கூட்டியே எடுத்துவைத்திருங்கள்.