வணக்கம் நேயர்களே, 听众们,你们好。(திங் துங் மன், நி மன் ஹௌ) முதலில் கடந்த முறை நாம் படித்த உரையாடலை மீண்டும் பார்க்கின்றோம்.
நீங்கள் கவனிக்காமல் ஒருவருக்கு தொந்தரவை ஏற்படுத்தினால் நீங்கள் உடனே, மன்னிப்பு கேட்பீர்கள் அல்லவா. அப்பொழுது, மன்னித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு தொந்தரவு தந்துள்ளேன். என்று நீங்கள் சொல்ல வேண்டும். சீன மொழியில் நீங்கள் இப்படி சொல்லலாம். 抱歉,麻烦您了。(BAO QIAN, MA FAN NIN LE,பௌ ச்சியன், மா ஃபன் நின் லா)எதிர் தரப்பினர் பதிலளிக்கும் போது, 没关系,没关系(MEI GUAN XI, மெய் குவன் சி )என்று சொல்லுவார்.
இப்பொழுது இந்த உரையாடலை கேளுங்கள்.
抱歉,麻烦您了。
没关系,没关系。
抱歉 என்றால், மன்னித்துக் கொள்ளுங்கள் என்பது பொருள், 麻烦您了என்றால், உங்களுக்கு தொந்தரவு தந்துள்ளேன் என்பது பொருள்.
没关系 என்றால், பரவாயில்லை என்று பொருள்.
இப்பொழுது இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்
抱歉,麻烦您了。
没关系,没关系。
இப்பொழுது ஒரு புதிய உரையாடலை படிக்கின்றோம்.
抱歉,抱歉,让您等了。
没关系,没关系。
இந்த உரையாடலின் தமிழாக்கத்தை கேளுங்கள்
抱歉,抱歉,让您等了。
மிகவும் மன்னிக்கவும், உங்களைக் காத்திருக்க வைத்துவிட்டேன்
没关系,没关系。
சரி, பரவாயில்லை, பரவாயில்லை.
தங்களின், மன்னிப்பு கேட்கும் மனநிலையை வற்புறுத்தும் வகையில், பொதுவாக, 抱歉 என்ற சொல்லை இரண்டு முறை சொல்ல வேண்டும். அதாவது 抱歉,抱歉。
இப்பொழுது இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்
抱歉,抱歉,让您等了。
没关系,没关系。
இந்த உரையாடலை மீண்டும் கேளுங்கள்.
抱歉,抱歉,让您等了。
没关系,没关系。
நேயர்களே, இப்பொழுது முன்பு படித்த ஒரு இரையாடலை நானும் வான்மதியும் இயல்பான வேகத்துடன் படிக்கின்றோம். நீங்கள் கேட்டு பாருங்கள், புரிந்ததா. புரிந்தது என்றால், எங்கள் மாதிரி போல, வேகமாக பயிற்சி செய்யுங்கள்.
வான்மதி 你好!
张老师, 早上好
见到你,我很高兴!
见到您,我也很高兴。
你工作忙吗?
我很忙,您呢?
我也很忙,欢迎你来我家!
谢谢您,再见!
不客气,再见!
புரிந்ததா, குடும்பத்தினருடன் பயிற்சி செய்து பாருங்கள். புரியவில்லை என்றால் பரவாயில்லை அடுத்த முறை மீண்டும் கேட்கலாம். புரிந்தால் இந்த உரையாடலின் தமிழாக்கத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.
இத்துடன் இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. வான்மதி, தமிழ்ச் செல்வம் உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றோம். 谢谢, 再见!
|