• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-19 08:44:03    
உகலக் கோப்பை படகு ஓட்டப் போட்டி

cri

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 117வது முழு கூட்டம் ஜூலை திங்கள் 9ஆம் நாள் சிங்கப்பூரில் நிறைவடைந்தது. இந்த 4 நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2012ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகரமாக லண்டன் மாநகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் குதிரை ஏற்றம் விளையாட்டு நடத்தப்படும் இடத்தை பெய்சிங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு மாற்றுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தடகளப்போட்டி சர்வதேச தடகள சம்மேளனம் ஏற்பாடு செய்த 2005 சர்வதேச தடகளப் போட்டியின் ருமேனிய சுற்று ஜூலை திங்கள் 8ஆம் நாள் நடைபெற்றது. சீன வீரர் லியூ சியாங் 13.24 வினாடி என்ற சாதனையுடன் 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அமெரிக்க வீரர் DOMINIGUE ARNOLD 13.11 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். பிரெஞ்சு வீரர் LADJI DOUCOURE மூன்றாம் இடம் பெற்றார்.

டென்னிஸ் சம்மேளனக் கோப்பைக்கான டென்னிஸ் குழு போட்டியின் இரண்டாவது பிரிவிலுள்ள சீன அணிக்கும் ஸ்லொவேனிய அணிக்குமிடையிலான போட்டி ஜூலை 9, 10 நாட்களில் பெய்சிங் சர்வதேச டென்னிஸ் மையத்தில் நடைபெற்றது. சீன அணி 4-1 என்ற செட் கணக்கில் ஸ்லொவேனியாவைத் தோற்கடித்தது. சம்மேளனக் கோப்பைக்கான உலக குழு போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டன. அவற்றில் முதல் 8 அணிகள் உலக குழுவின் முதலாம் பிரிவைச் சேர்ந்தவை. ஏனைய 8 அணிகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. உலக பெயர் பட்டியலில் 16ஆம் இடத்துக்கு பிந்திய அணிகள் பல்வேறு கண்டங்களின் வட்டார போட்டியில் கலந்துகொள்கின்றன. முன்னர், சீன அணி ஆசிய வட்டாரப் போட்டியில் கலந்துகொண்டு வந்தது.

படகு ஓட்டப் போட்டி உலக கோப்பை படகு போட்டி ஜூலை 10ஆம் நாள் சுவீட்சர்லந்தில் நிறைவடைந்தது. மகளிருக்கான நான்கு பேர் ஒரு துடுப்பு படகு ஓட்டப் போட்டி, மகளிருக்கான குறைவான எடையுடைய நான்கு பேர் இரட்டை துடுப்பு படகு ஓட்டப் போட்டி, மகளிருக்கான குறைவான எடையுடைய இரட்டையர் இரட்டை துடுப்பு படகு ஓட்டப் போட்டி ஆகியவற்றில் சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தவிரவும், மகளிருக்கான குறைவான எடையுடைய நான்கு பேர் இரட்டை துடுப்பு படகு ஓட்டப் போட்டியில் சீன அணி ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றது.